முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் ‘வீட்ல விசேஷம்’ ட்ரெய்லர்… 3 மில்லியன் பார்வைகளை கடந்தது

ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் ‘வீட்ல விசேஷம்’ ட்ரெய்லர்… 3 மில்லியன் பார்வைகளை கடந்தது

வீட்ல விசேஷம் படத்தின் போஸ்டர்

வீட்ல விசேஷம் படத்தின் போஸ்டர்

பதாய் ஹோ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆர்.ஜே. பாலாஜி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘வீட்ல விசேஷம்’ படத்தின் ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்த ஆர்.ஜே. பாலாஜி, எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அடுத்ததாக நயன்தாராவுடன் ஆர்.ஜே. பாலாஜி இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பதாய் ஹோ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில், சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி யூடியூபில் 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இதையும் படிங்க - யானை தந்தங்கள் தொடர்பாக நடிகர் மோகன்லால் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

இந்த படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபாலாகிருஷ்ணன் இசையமைக்க, செல்வா எடிட்டிங் செய்துள்ளார்.

வீட்ல விசேஷங்க ட்ரெய்லரைப் பார்க்க...

' isDesktop="true" id="750977" youtubeid="RhfCAs7b42k" category="cinema">

நேற்று லக்னோ – பெங்களூரு இடையே நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியின் இடையே, வீட்ல விசேஷம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதற்கு முன்பாக ஆர்.ஜே. பாலாஜியின் படங்களான எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்களின் ட்ரெய்லர்களும் ஐபிஎல் போட்டிக்கு இடையே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் கங்குலியின் பயோ பிக்?

வீட்ல விசேஷம் படத்தில் ஊர்வசி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: RJ Balaji