நயன்தாராவின் அப்படி ஒரு அர்ப்பணிப்பு - மூக்குத்தி அம்மன் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி

நயன்தாராவின் அப்படி ஒரு அர்ப்பணிப்பு - மூக்குத்தி அம்மன் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜியுடன் நயன்தாரா
  • Share this:
நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

எல்.கே.ஜி படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். எல்.கே.ஜி படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் மூக்குத்தி அம்மன், நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிகளில் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா அப்பகுதியில் இருக்கும் கோவில்களுக்கும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் விசிட் அடித்தார். அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் நிறைவடைந்திருப்பதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “ஐசரி கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம்.

படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம்.

இயக்குநர் என்.ஜே. சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும்.” என்றார்.

மேலும் படிக்க: அஜித்துக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
First published: January 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading