முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

வீட்ல விசேஷம்

வீட்ல விசேஷம்

Veetla Visesham OTT : ஆர்.ஜே. பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் 17-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனையொட்டி படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஆர்.ஜே. பாலாஜி தீவிரமாக ஈடுபட்டார்.

இதன் காரணமாக படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட நிலையில், படம் வெளியாகி குடும்ப ரசிகர்களின் விருப்பத்தை பெற்றது.

திருமணம் முடித்த மகன் ஆர்.ஜே. பாலாஜி இருக்கும்போது அவரது தாயார் கர்ப்பமடைகிறார். இது மகன்களுக்கு அதிப்ருப்தியை அளிக்கிறது. இவ்வாறான கதைக் களத்தில் பெண் சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் கலகப்பாக படம் உருவாக்கப்பட்டிருக்கும். இதில் ஆர்.ஜே. பாலாஜியின் அப்பாவாக, ஊர்வசியின் கணவராக சத்யராஜ் நடித்திருப்பார்.

இதையும் படிங்க - பின்னணி இசையின் முன்னணி நாயகன் யுவன் சங்கர் ராஜா!

2018-ல் பதாய் ஹோ என்ற திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரீமேக் தான் இந்த வீட்ல விசேஷம். இந்த நிலையில் வீட்ல விசேஷம் படம் ஜீ5 ஓடிடி தளத்தில இம்மாதம் 15-ம்தேதி முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

ஆர்.ஜே. பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா ஆர்.கே. படத்தின் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

First published:

Tags: Kollywood, RJ Balaji