நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ரன் பேபி ரன்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகராக உயர்ந்தவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது நாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்தன.
இந்த நிலையில் தற்போது ஜியன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் 'ரன் பேபி ரன்' என அந்த படத்திற்கு தலைப்பு வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அத்துடன் ரன் பேபி ரன் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
My first thriller 🖤
#RunBabyRun 🏃
In theatres from February 2023 ! pic.twitter.com/jOpgWBw63Y
— RJ Balaji (@RJ_Balaji) December 14, 2022
Also read... வாரிசு படத்தை நள்ளிரவு திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டம்!
இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா முதலானோர் நடிக்கின்றனர். த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். மேலும் சர்தார் திரைப்படத்தை தயாரித்த லக்ஷ்மன் குமார் 'ரன் பேபி ரன்' படத்தை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.