தனது வீட்ல விசேஷம் திரைப்படத்தை விமர்சித்தவருக்கு ட்விட்டரில் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார் ஆர்ஜே பாலாஜி.
வாட்ஸ்அப் அரசியல் கருத்துக்களை மேலோட்டமாக தூவி படம் செய்வதில் ஆர்ஜே பாலாஜி கெட்டிக்காரர். அவர் கடைசியாக அமீர்கானின் பிகே படத்தை தழுவி எடுக்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்தார். அந்தப் படம் பரவலான வரவேற்புடன் வெற்றியும் பெற்றது. அதை அடுத்து அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் வீட்ல விசேஷம். இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜியின் தந்தையாக சத்யராஜும், தாயாக ஊர்வசியும் நடித்திருக்கிறார்கள். நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். பாட்டியாக சமீபத்தில் மறைந்த மலையாள நடிகை கேபிஏசி லலிதா நடித்துள்ளார்.
விஜய்யின் பீஸ்ட் பாடலை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்ன செய்தார் தெரியுமா?
முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்தப் படம் இந்தியில் வெளியான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கல்யாண வயதில் பிள்ளைகள் இருக்கையில் தாய் கர்ப்பமானால் என்ன ஆகும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தியில் இதனை நகைச்சுவை கலந்து எடுத்திருந்தார்கள். சமீபத்தில் மலையாளத்தில் வந்த ப்ரோ டாடி திரைப்படத்திலும் இந்த கதையுண்டு. இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!
அதேபோல ஒரு வெற்றியை இந்தப் படமும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் ஒருவர், 'கான்ட்ரவர்ஸி கதை, தமிழ்நாட்டில் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என சொல்ல முடியாது' என கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஆர்ஜே பாலாஜி, 'ஆமா, குடும்பத்தில் ஒருத்தர் கர்ப்பமா ஆனதை படம் எடுத்தா சர்ச்சைக்குரிய படம். ஹீரோ ரவுடி, டான், கொலைகாரன், திருடன், கடத்தல்காரனாக நடித்தால் அது குடும்ப கதை படம்' என பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தை முதலில் ஆக்சன் என்டர்டெய்னர் என்றனர். படம் வந்த பிறகு அதில் உள்ள சென்டிமெண்ட் காட்சிகள் வைத்து ஃபேமிலி என்டர்டெய்னர் என விளம்பரம் செய்தனர். ஆர்ஜே பாலாஜி இதைத்தான் கோடிட்டுக் காட்டுகிறாரோ என்ற கேள்வி அவரது ட்வீட் காரணமாக எழுந்துள்ளது.
வீட்ல விசேஷம் திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். ஜூன் மாதம் படம் திரைக்கு வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
-
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.