நயன்தாராவை விமர்சித்த நெட்டிசனுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி!

நயன்தாராவை விமர்சித்த நெட்டிசனுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி!
நயன்தாரா | ஆர்.ஜே.பாலாஜி
  • Share this:
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் கேரக்டரை கேலி செய்யும் விதமாக கருத்து பதிவிட்ட நெட்டிசனுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்த படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.


மே மாதம் திரைக்கு வர உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் அம்மனாக தோன்றி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் நயன்தாரா.



இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் யாரு அம்மன் வேடம் போடணும் என்ற கூறுபாடு இல்லாமல் போய்விட்டது என்று கமெண்ட் அடித்தார். அதற்கு பதிலளித்த ஆர்.ஜே.பாலாஜி உங்கள் பெயரில் இருக்கிற கடவுள் தான் உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கணும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.மேலும் படிக்க: ஆணவக் கொலைகள் பற்றிய சமரசமில்லாத கதை...! கன்னி மாடத்தை பாராட்டிய பா.ரஞ்சித்
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading