Home /News /entertainment /

மீண்டும் சத்யராஜுடன் இணையும் ஆர்.ஜே.பாலாஜி!

மீண்டும் சத்யராஜுடன் இணையும் ஆர்.ஜே.பாலாஜி!

சத்யராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

சத்யராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

வீட்ல விசேஷம் படதிற்கு பிறகு சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜி உடன் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வீட்ல விசேஷம் படதிற்கு பிறகு சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜி உடன் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ்.

ஆர்.ஜே.பாலாஜி தற்போது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயங்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். அந்த திரைப்படத்திற்கு சிங்கப்பூர் சலூன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தன.  இந்த நிலையில் இன்று படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜியுடன் சத்யராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைக்கிறார். சிங்கப்பூர் சலூன் படப்பிடிப்பு, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பள்ளியில் செட் அமைத்து நடத்தப்படுகிறது. அங்கு 20 நாட்கள் படபிடிப்பு நடத்துகின்றனர். அதன் பின் சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் 20 நாட்களும், அதை முடித்த பிறகு தென்காசி பகுதியில் 20 நாட்களும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

தனியார் விமானத்தில் மகாலட்சுமியுடன் ஹனிமூன் ட்ரிப்? வைரலாகும் ரவீந்தர் பதிவு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சத்யராஜ் ஆகியோர் வீட்ல விசேஷம் படத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் வசூல் ரீதியில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: Actor sathyaraj

அடுத்த செய்தி