முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / RJ Balaji: பையனுக்கு கல்யாணம் அம்மா கர்ப்பம்... ஆர்.ஜே.பாலாஜியின் புதிய படம்!

RJ Balaji: பையனுக்கு கல்யாணம் அம்மா கர்ப்பம்... ஆர்.ஜே.பாலாஜியின் புதிய படம்!

ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி

பையனுக்கு கல்யாணம் முடிக்கிற நேரத்தில் அம்மா கர்ப்பமாக இருந்தால் எப்படி இருக்கும்?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மூக்குத்தி அம்மனை தொடர்ந்து மேலுமொரு படத்தில் ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடிக்கிறார். இது வெற்றிப் பெற்ற இந்தி படமொன்றின் தழுவல்.

ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டிக்கும், அவர் பேசும் வாட்ஸ்அப் கருத்துக்களுக்கும் ஏ சென்டர்களில் கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நாயகனாக நடித்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன் இரண்டும் வெற்றிப் படங்கள். தற்போது மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். இது இந்தி படத்தின் தழுவல்.

மூக்குத்தி அம்மன் படம்கூட இந்தியில் வெளியான அமீர்கானின் பிகே படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்டதே. படம் வெளியான போது இதனை பலரும் குறிப்பிட்டு எழுதினர். அப்போது மறுத்த ஆர்ஜே பாலாஜி, படம் ஓடி முடிந்த பிறகு, ஆமா பிகே படத்தின் இன்ஸ்பிரேஷனில் எழுதப்பட்டது தான் மூக்குத்தி அம்மன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இப்போது நேரடியாகவே இந்தி படத்தை தழுவி ஒரு படத்தை எடுக்கிறார். படம் ’பதாய் ஹோ’.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2018-ல் இந்தப் படம் வெளியானது. ஆயுஷ்மான் குரானா இளைஞன். அவருக்கு காதலி ஒருத்தி இருக்கிறாள். கல்யாணப்பேச்சை எடுக்கிற நேரம், ஆயுஷ்மான் குரானாவின் அம்மா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. பையனுக்கு கல்யாணம் முடிக்கிற நேரத்தில் அம்மா கர்ப்பமாக இருந்தால் எப்படி இருக்கும்? இந்த சூழலின் பின்னணியில் நகைச்சுவையும், சென்டிமெண்டும் கலந்து எடுக்கப்பட்ட ’பதாய் ஹோ’ இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை தமிழில் எடுக்கிறார்கள். ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் ஆர்ஜே பாலாஜியும், அவரது அப்பா வேடத்தில் சத்யராஜும், அம்மா வேடத்தில் ஊர்வசியும் நடிக்கின்றனர்.

இன்னொரு வெற்றிப்படம் நிச்சயம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor sathyaraj, RJ Balaji