முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினிகாந்த்தை பற்றி நான் அப்படி பேசியிருக்கக்கூடாது.. ஆர்.ஜே.பாலாஜி வருத்தம்..

ரஜினிகாந்த்தை பற்றி நான் அப்படி பேசியிருக்கக்கூடாது.. ஆர்.ஜே.பாலாஜி வருத்தம்..

ரஜினிகாந்த் |ஆர்.ஜே.பாலாஜி

ரஜினிகாந்த் |ஆர்.ஜே.பாலாஜி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நான் கொடுத்த பேட்டியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை கதையாக உருவாக்கி கன்னியாகுமரி மற்றும் சென்னையில் படமாக்கியுள்ளது படக்குழு.

தீபாவளிக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி, ட்விட்டரில் லைவ்வில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரஜினியைப் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பாலாஜி, “நான் சூப்பர் ஸ்டாரின் மிகத் தீவிரமான ரசிகன். சிறுவயதில் என்னுடைய தாத்தா  ரஜினி ஒரு நல்ல மனிதர் என்று சொன்னார். அது இன்றுவரை என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அவர் ஒரு சூப்பர் மேன். மிகச் சிறந்த மனிதர்.

தளபதி முதல் தர்பார் வரை அவரைப்பற்றிய நிறைய நினைவுகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் அவர் அரசியலுக்கு வருவது பற்றி நான் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறேன். அதை பின்னர் பார்க்கும்போதெல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கும். அப்படி பேசியிருக்கக் கூடாது என தோன்றும். அதற்காக நான் மிகவும் வருந்தினேன்.

சந்தோஷம் மற்றும் அவர் நினைக்கும் அனைத்தும் கைகூட வேண்டுமென நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார். 

First published:

Tags: Rajinikanth, RJ Balaji