ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வழிப்பறி கொள்ளையர்களால் நடு ரோட்டில் நடிகை சுட்டுக் கொலை

வழிப்பறி கொள்ளையர்களால் நடு ரோட்டில் நடிகை சுட்டுக் கொலை

ரியா குமாரி

ரியா குமாரி

தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த நடிகை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் 30 வயதான நடிகை ரியா குமாரி. மேற்கு வங்கத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ரியாவின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ்குமார், 3 வயது மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார் ரியா.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து கொல்கத்தாவுக்கு ரியா காரில் புறப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களின் கார் சென்றுள்ளது. மகிஷ்ரேகா பாலம் அருகே சென்ற போது சிறிது ஓய்வெடுப்பதற்காக காரை சாலை ஓரமாக நிறுத்தியுள்ளார் பிரகாஷ் குமார்.அப்போது துப்பாக்கியுடன் வந்த மூன்று கொள்ளையர்கள் பிரகாஷ் குமாரை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்ய முயன்றுள்ளனர்.

இதனை பார்த்த ரியா குமாரி கொள்ளையர்களிடம் இருந்து தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது மூன்று பேரில் ஒரு கொள்ளையன் ரியா குமாரியை துப்பாக்கியால் சுட்டு விட்டார். கிடைத்த பணத்துடன் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மனைவியை காரில் ஏற்றி, 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த உலுபெரியா நகரின் எஸ். சி. சி. மருத்துவக் கல்லூரியில் ரியாவை சோ்த்துள்ளாா். ரியாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதற்கிடையே ரியா கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது கணவர் பிரகாஷ்குமார் மீது சந்தேகம் இருப்பதாக ரியாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து கொலை தொடர்பாக மேற்கு வங்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.சம்பவ பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் காரை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

Also read... இன்ஸ்டா பிரபலம் லீனா நாக்வன்ஷி மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை

ரியாவின் 3 வயது குழந்தையிடம் இருந்து தகவல்கள் பெற முடியுமா என்றும் ஆய்வு செய்துள்ளனர்.ரியாவின் கணவர் பிரகாஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலம் தெளிவாக இல்லை என்றும் மேற்கு வங்க போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகை ரியாவை கொன்றது கொள்ளையர்களா? அல்லது கணவரா? என்பது ஓரிரு நாட்களில் விசாரணையில் தெரிந்து விடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Crime News