எந்த மாரி... அந்த மாரி... நடனமாடி அசத்திய ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங் சமூகவலைதள பக்கத்தில் வேடிக்கையான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

எந்த மாரி... அந்த மாரி... நடனமாடி அசத்திய ரித்திகா சிங்
நடிகை ரித்திகா சிங்
  • Share this:
ஃபேஸ் ஆப் என்ற செயலியில் நடிகைகளின் புகைப்படங்கள் ஆணாக மாறினால் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் பலரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், நடிகை ரித்திகா சிங் வித்தியாசமான நடன வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இறுதிசுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ரித்திகா சிங் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

தற்போது அரவிந்த்சாமியுடன் வணங்காமுடி என்ற படத்தில் நடித்து வரும் ரித்திகா, கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக் இருக்கும் ரித்திகா அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆங்கிலத்தில் ஹிட் அடித்த பாடல்களுக்கு நடனமாடியிருக்கும் ரித்திகா, ஷக்கிரா, ஜஸ்டின் பைபர் உள்ளிட்ட பிரபலங்கள் முகத்துக்கு பதிலாக தன் முகத்தை அதில் பொருத்தியிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 
View this post on Instagram
 

This new thing is too much fun 😂❤️


A post shared by Ritika Singh (@ritika_offl) on


தனது வீடியோ பதிவுக்கு, “இந்த புதிய விஷயம் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது” என்று ரித்திகா சிங் தலைப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading