ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'உங்கள் பாராட்டு என் கனவு'.. ரஜினி பாராட்டால் திக்குமுக்காடிய காந்தாரா இயக்குநர்

'உங்கள் பாராட்டு என் கனவு'.. ரஜினி பாராட்டால் திக்குமுக்காடிய காந்தாரா இயக்குநர்

ரஜினிகாந்த்-இயக்குனர் ரிஷாப் ஷெட்டி

ரஜினிகாந்த்-இயக்குனர் ரிஷாப் ஷெட்டி

காந்தாரா திரைப்படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ''இந்திய சினிமாவில் தலைசிறந்த படைப்பு..'' காந்தாராவை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்துக்கு இயக்குனர் ரிஷாப் ஷெட்டி பதில் ட்வீட் செய்துள்ளார்,

  ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கே.ஜி.எஃப் முதல் மற்றும் 2-ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

  Read More: லைகர் படுதோல்வியால் கோபம்.. இயக்குநரின் போனைக் கூட எடுக்காமல் கடுப்பு காட்டும் விஜய் தேவரகொண்டா!?

  அனைத்து முக்கிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளதால் மெல்ல மெல்ல ரசிகர்களிடையே காந்தாரா படம் ரீச்சாகி வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை புகழ்ந்தும், படத்தை பாராட்டியும் எழுதி வருகின்றனர். காந்தாரா படம் ஆஸ்கருக்கு தகுந்தது எனவும், படத்தின் மேக்கிங் கண்டிப்பாக ஆஸ்கர் வாங்கும் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் #KantaraForOscars என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் படத்தை பார்த்து படக்குழுவுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

  '''தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள்தான் அதிகம்’ இந்த விஷயத்தை சினிமாவில் காந்தாராவை விட வேறு யாரும் அழகாக காட்டவில்லை. எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ரிஷப் உங்களுக்கு வாழ்த்துகள். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பைக் கொடுத்த ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துகள்’’ எனக் குறிப்பிட்டார்.

  அதற்கு  பதில் அளித்துள்ள இயக்குநர் ரிஷாப் ஷெட்டி  "அன்புள்ள ரஜினிகாந்த் சார் நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார், நான் சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகன். உங்கள் பாராட்டு என் கனவு. மேலும் மண் சார்ந்த கதைகளைச் செய்ய நீங்கள் என்னைத் தூண்டுகிறீர்கள் மற்றும் எல்லா இடங்களிலும் உள்ள எங்கள் பார்வையாளர்களை ஊக்குவிக்கிறீர்கள். நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  Read More:வாடகை தாய் விவகாரம்: நயன்தாரா விதி மீறவில்லை - தமிழ்நாடு அரசு தகவல்

  வசூல் வேட்டை

  பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மெதுவாக பயணத்தை தொடங்கிய காந்தாரா தற்போது வசூல் வேட்டை செய்து வருகிறது.

  தற்போது வசூலில் கேஜிஎப்பையும் தோற்கடித்த காந்தாரா தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆஹா ஓஹோவென பாராட்டுகள் இருந்தாலும் சில சர்ச்சையிலும் சிக்கி வருகிறது காந்தாரா படம். தெய்வ வழிபாடு, மலைவாழ் மக்கள் என சில கருத்து முரண்பாடுகளை சிலர் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பாடல் காப்பி அடிக்கப்பட்டதாகவும் காந்தாரா மீது குற்றச்சாட்டை கேரள இசைக்குழு வைத்துள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Rajinikanth, Rajinikanth Fans