ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 உறுதி - தயாரிப்பாளர் தகவல்

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 உறுதி - தயாரிப்பாளர் தகவல்

காந்தாரா

காந்தாரா

காந்தாரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ரிஷப் ஷெட்டி முன்பே கூறியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரிஷப் ஷெட்டியின் பீரியட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தினர்.

ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கிய, கன்னட திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

ஹோம்பாலே பிலிம்ஸின் இணை நிறுவனர் விஜய் கிரகந்தூர், காந்தாராவுக்கு கிடைத்த வரவேற்பால் தங்கள் நிறுவனம் பரவசம் அடைந்துள்ளதாகவும், அதனால் விரைவில் படத்தின் "முன் கதையையோ, அல்லது தொடர்ச்சியையோ" இரண்டாவது பாகமாக உருவாக்குவதை உறுதிப்படுத்தினார்.

“ரிஷப் ஊரில் இல்லை, அவர் திரும்பி வந்தவுடன், நாங்கள் படம் குறித்து விவாதிப்போம். இது ஒரு தொடர்ச்சி கதையாகவோ அல்லது முன் கதையாகவோ இருக்கும். இன்னும் ரெண்டு மாதத்தில் அந்த வேலைகள் தொடங்கும். ஆகவே எங்களிடம் காந்தாரா 2 படத்துக்கான பிளான் இருக்கிறது” என்றார் விஜய்.

பெண் சுதந்திரத்தை அனுபவிக்கணும்... பெரியார் சிந்தனைகளைப் பேசிய இனியா சீரியல் - வரவேற்கும் நெட்டிசன்கள்!

காந்தாரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ரிஷப் ஷெட்டி முன்பே கூறியிருந்தார். தக்ஷிண கன்னடாவின் கற்பனைக் கிராமத்தை மையமாக வைத்து வெளியான காந்தாரா படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: