முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ஏதாவது கிளப்பி விடாதீங்க.. என்னோட அடுத்தப் பட ஹீரோ இவர்தான்' - போட்டோவுடன் அறிவித்த இயக்குநர் மோகன்.ஜி

'ஏதாவது கிளப்பி விடாதீங்க.. என்னோட அடுத்தப் பட ஹீரோ இவர்தான்' - போட்டோவுடன் அறிவித்த இயக்குநர் மோகன்.ஜி

ரிச்சர்டு ரிஷி

ரிச்சர்டு ரிஷி

இயக்குநர் மோகன் ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிச்சர்டு ரிஷியின் படத்தைப் பகிர்ந்துஇவர் தான் தனது அடுத்தப்பட ஹீரோ என அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 17 ஆம் தேதி வெளியான பகாசூரன் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதிவு செய்திருக்கும் இந்தப் படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

படம் குறித்து நடிகர் கார்த்தி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், யோகி பாபு, இயக்குநர் பேரரசு, எஸ்.ஜே.சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், ஜீவா, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியும் வாழ்த்தியும் கமெண்ட் செய்துவருகிறார்கள். குறிப்பாக இயக்குநர் செல்வராகவனின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நடிகர் கார்த்தி தனது பதிவில், இயக்குநர் செல்வராகவனை முழு நேர நடிகராக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களைப் போல சிலருக்கு மட்டுமே அவர் மிகச்சிறந்த நடிகர் என்பது தெரியும். தற்போது உலகம் அவரது நடிப்புத் திறனை காண்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிச்சர்டு ரிஷியின் படத்தைப் பகிர்ந்து, ''சில மீடியாக்களுக்கு.. இவரு யாருன்னு தெரியுதா.. காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்டு ரிஷி சார்.. நீங்களா ஏதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம் முக்கியமான செய்தி.. என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்...என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Director mohan