Home /News /entertainment /

Exclusive : சுஷாந்த் சிங் மரணம் குறித்து 75 நாட்களுக்கு பிறகு மனம் திறந்த முன்னாள் காதலி ரியா சக்ரபர்த்தி

Exclusive : சுஷாந்த் சிங் மரணம் குறித்து 75 நாட்களுக்கு பிறகு மனம் திறந்த முன்னாள் காதலி ரியா சக்ரபர்த்தி

சுஷாந்த் சிங், ரியா சக்ரபோர்த்தி

சுஷாந்த் சிங், ரியா சக்ரபோர்த்தி

ஒரு காதலியாக மறக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள மட்டுமே தாம் அறிவுறுத்திவந்ததாக ரியா கூறியுள்ளார்.

    சுஷாந்த் சிங்கை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்க தாம் போராடியதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபர்த்தி கூறியுள்ளார். நியூஸ் 18 குழும தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகர் சுஷாஷ்ந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு மும்பை போலீசாரிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்ட பின் விசாரணை சூடுபிடித்துள்ளது. பாலிவுட்டில் சினிமா வாரிசுகளின் ஆதிக்கம் தான் சுஷாந்த் மரணத்திற்கு காரணம் எனவும் கூறப்பட்டது. வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையும் தீவிரமாக விசாரித்துவருகிறது.

    இந்நிலையில், தற்போது பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு என்பதை நோக்கி வழக்கு திசை திரும்பியுள்ளது. சுஷாந்திற்கு அவரது காதலி ரியா சக்ரபர்த்தி போதைப் பொருள் கொடுத்துவந்ததாக சுஷாந்த் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில்,போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு ரியா மீது வழக்கு பதிவு செய்தது.

    இந்த விவகாரம் உள்பட தன் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து 75 நாட்களுக்கு பிறகு மனம் திறந்துள்ள ரியா சக்ரபர்த்தி, நியூஸ் 18 குழும தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

    தான் ஒருபோதும் போதைப் பொருட்களை பயன்படுத்தியது இல்லை என்றும், ரத்த பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும் ரியா தெரிவித்துள்ளார். சுஷாந்த் தன்னை சந்திப்பதற்கு முன்பிருந்தே கஞ்சா எடுத்துக்கொண்டிருந்ததாகவும், சுஷாந்தின் மேலாளர் ஸ்ருதி மோடியுடன் சேர்ந்து, சுஷாந்தை கஞ்சா பழக்கத்திலிருந்து மீட்க தாங்கள் முயற்சி மேற்கொண்டதாகவும் ரியா கூறியுள்ளார்.

    கேதார்நாத் படத்தின்போது மனநோயிலிருந்து விடுபட சுஷாந்த் சிகிச்சை எடுத்துவந்ததால், ஒரு காதலியாக மறக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள மட்டுமே தாம் அறிவுறுத்திவந்ததாக ரியா கூறியுள்ளார். சுஷாந்தின் சிகிச்சையில் தனக்கு எந்த பங்கும் இல்லை எனவும், அவருக்கு சிகிச்சை அளித்த 5 மருத்துவர்களை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும் ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

    பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தாமும், தனது குடும்பத்தாரும், பல முறை தற்கொலை செய்ய எண்ணியதாகவும் ரியா சக்ரபர்த்தி தனது பேட்டியில் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட துறைகள் விசாரித்துக்கொண்டு இருக்கும் போது, சுஷாந்தின் குடும்பத்தினர் அமைதியாக இருப்பதே சிறந்ததது எனவும் ரியா கூறியுள்ளார்.

    இந்நிலையில், தனது சகோதரர் உயிரிழந்த பிறகு அவரின் பிம்பத்தை உடைக்கும் வகையில் ரியா சக்ரபர்த்தி பேசிவருவதாக சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    பாலிவுட்டில் கொக்கைன் போதைப்பொருள் என்பது சாதாரணம் எனக் கூறியுள்ள நடிகை கங்கனா ரனாவாத், ரத்த பரிசோதனை நடத்தப்பட்டால், முன்னணி நாயகர்கள் சிறை செல்வார்கள் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Sushant Singh Rajput

    அடுத்த செய்தி