”என்னைப் பற்றி படுமோசமாக எழுதுகிறார்கள்.. நீதி கிடைக்கும், சத்யமேவ ஜெயதே” ... சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபர்த்தி (வீடியோ)

மின்னணு ஊடகங்களில் என்னைப் பற்றி பயங்கரமான விஷயங்கள் உருவாக்கப்படுகின்றன. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைக்குறித்து நான் எதுவும் பேசப்போவதில்லை. எனினும் வாய்மை வெல்லும்” என்று ரியா தெரிவித்திருக்கிறார். 

”என்னைப் பற்றி படுமோசமாக எழுதுகிறார்கள்.. நீதி கிடைக்கும், சத்யமேவ ஜெயதே” ... சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபர்த்தி (வீடியோ)
ரியா சக்ரபர்த்தி
  • Share this:
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான விசாரணையில், அவரது காதலி ரியா சக்ரவர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனக்கு நீதி கிடைக்கும் என்று தான் நம்புவதாகக் கூறிய ரியா, "எனக்கு கடவுள் மீதும் நீதித்துறை மீதும் மிகுந்த நம்பிக்கை உள்ளது, எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். மின்னணு ஊடகங்களில் என்னைப் பற்றி பயங்கரமான விஷயங்கள் உருவாக்கப்படுகின்றன. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைக்குறித்து நான் எதுவும் பேசப்போவதில்லை. எனினும் வாய்மை வெல்லும்” என்று தெரிவித்திருக்கிறார். 

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் நெருங்கிய தோழியான ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் சமூகவலைதளம் வாயிலாக சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.


ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சுஷாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாக துன்புறுத்தியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரில், “சுஷாந்த் சிங்குக்குச் சொந்தமான ரு.1.5 கோடி அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கிடம் இருந்த லேப்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ரியாவும் அவரது குடும்பத்தினரும் திருடிவிட்டார்கள். சுஷாந்தின் மருத்துவ அறிக்கைகளை வெளியில் சொல்வதாக மிரட்டியுள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாட்னா காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகை ரியா மனு தாக்கல் செய்துள்ளார். தங்கள் தரப்பு பதிலைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி சுஷாந்த் சிங்கின் தந்தை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading