• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Extracurricular - திருத்த முடியாத தவறுகள்...!

Extracurricular - திருத்த முடியாத தவறுகள்...!

எக்ஸ்ட்ராகரிகுலர்

எக்ஸ்ட்ராகரிகுலர்

2020 இல் நெட்பிளிக்ஸில் வெளியான தென்கொரிய வெப் தொடர் எக்ஸ்ட்ராகரிகுலர். ஒரு பள்ளிதான் பிரதான கதைக்களம். படத்தின் நாயகன் பள்ளியில் படிக்கும் மாணவன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரிய திரைப்படங்கள், வெப் தொடர்களை எச்சரிக்கையுடன்தான் பார்க்க வேண்டும். நாம் சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து அடிப்பார்கள். வன்முறை என்றால் நூறு சதவீதம் வன்முறை இருக்கும். ஆக்ஷன் என்றால் அதுவும் நூறு சதவீதம். சாதாரண குற்றமாக இருக்கும். ஆனால், அதை யார் யாருக்கு செய்கிறார்கள் என்பதில் நம்மை கிலி பிடிக்க வைப்பார்கள். உதாரணமாக, முப்பது வயது நபர் செய்யும் அதே குற்றத்தை பள்ளியில் படிக்கும் மாணவன் செய்தால்...? 

2020 இல் நெட்பிளிக்ஸில் வெளியான தென்கொரிய வெப் தொடர் எக்ஸ்ட்ராகரிகுலர். ஒரு பள்ளிதான் பிரதான கதைக்களம். படத்தின் நாயகன் பள்ளியில் படிக்கும் மாணவன். திறமைசாலி. படிப்பில் எப்போதும் முதலாவதாக வருகிறவன். எந்த வம்பு தும்புக்கும் போகாதவன். பிளாக் மார்க் எதுவும் இல்லை. அதனால், வகுப்பில் பிற மாணவர்கள் மத்தியில் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் பட்டம்

நமது நாயகன் ஜிசூ (Ji-Soo) வுக்கு அம்மா இல்லை. தந்தை குடிகாரர். குடும்பத்தை அவர் ஒருபோதும் கவனித்துக் கொண்டதில்லை. அதனால் ஜிசூ தனியாக வசிக்கிறான். அவனது ஒரே லட்சியம், வருமானம் வருகிற ஏதாவது ஒரு வேலையைப் பார்த்து, சராசரியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். தனியாக வசிப்பதற்கும், தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்கும் அவனுக்கு பணம் தேவை. அதற்கு அவன் ஒரு ரகசிய வேலை செய்கிறான். ஆன் லைன் பிம்ப்பெண்கள் தேவைப்படும் நபர்களுக்கு ,ஆன் லைன் மூலமாக பெண்களை அனுப்பி வைப்பது. அவனது ஆன்லைன் வட்டத்தில் சில பெண்கள் இருக்கிறார்கள். யாருடனும் அவனுக்கு நேரடி தொடர்பில்லை. அனைத்தும் போன் மூலம் நடக்கிறது. கஸ்டமர் யாரோ, அவர்கள் சொல்லும் இடத்துக்கு பெண்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். கஸ்டமர் அவர்களைத் துன்புறுத்தினால், அவர்களுக்கு தரப்படும் பிரத்யேக பிரேஸ்லெட்டை ஆக்டிவெட் செய்தால் போதும். அவர்கள் ஆபத்தில் இருப்பது தெரியவரும். ஓல்டு மேன் எனப்படும் நபர் வந்து அவர்களை காப்பாற்றுவார். இந்த ஓல்டு மேன் வழியாகவே பணபரிவர்த்தனை நடக்கும். இதை எல்லாம் கட்டுப்படுத்துகிறவர் அங்கிள் என்று அறியப்படுகிற ஒரு பெரிய மனிதர். அந்த அங்கிள் ஜிசூ என்பது ஓல்டு மேன் தவிர யாருக்கும் தெரியாது.தொழில் சிறப்பாக நடைபெறும் பொழுது, அவனுடன் படிக்கும் மாணவி வடிவில் பிரச்சனை வருகிறது. சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியாவும், தூள் சொர்ணாக்காவும் கலந்த ஒரு டிஸைன் அவள். அவள் நாயகனின் தொழில் ரகசியத்தை கண்டுபிடிக்கிறாள். தன்னையும் பார்ட்னராக்கிக் கொள்ளக் கேட்கிறாள். அவள் இணைந்த பிறகு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. இதே தொழிலில் இருக்கும் முட்டாள் சைக்கோ ஒருவனிடம் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அவனிடமிருந்து தப்பித்தார்களா, இல்லையா, அவர்களின் குட்டு வெளிப்பட்டதா, இல்லையா என்பது கதைஆன் லைன் பிம்ப் முப்பது வயது நபர் என்றால் அது சாதாரண க்ரைம். அதையே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் செய்தால்? இந்த ஆச்சரியம்தான் இந்தத் தொடரின் முக்கிய அம்சம். அனைத்துப் பாடங்களிலும் புத்திசாலி மாணவன் ஒரு க்ரைம் செய்யும் போது எத்தனை நேர்த்தியும், ஒழுங்கும் அதில் இருக்கும் என்பதை முதலில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு அவன் புத்திசாலித்தனமாக எதுவும் செய்வதில்லை. சம்பவங்கள் போகிற போக்கில் அடித்துச் செல்லப்படுகிறவனாக இருக்கிறான். இது இந்தத் தொடரின் முக்கிய குறை. மொத்தம் உள்ள பத்து எபிசோடில் கடைசியில் பரிசை தட்டிச் செல்வது ஓல்டு மேனாக வரும் நபர். அவரைப் பற்றி எந்த கதையும் சொல்லப்படுவதில்லை. ஆனால், வருகிற காட்சிகளை வைத்து, அவர் ஒரு எக்ஸ் மிலிட்ரி மேன், பழைய வாழ்க்கைப் பிடிக்காமல் தெருவோரம் வசித்து வந்தவர் என்பது தெரிகிறது. மனிதரின் ஒவ்வொரு அடியும் இடியாக கிடுகிடுக்க வைக்கிறதுஇந்தத் தொடரின் இன்னொரு சிறப்பான கதாபாத்திரம் ஜிசூவின் இன்னொரு சக மாணவி மின் கே. படித்துக் கொண்டே பாலியல் தொழில் செய்கிறவள். அவளுக்கு கஸ்டமர்களை ஏற்பாடு செய்வது தன்னுடன் படிக்கும் ஜிசூ என்பது தெரியாதுதொடர் நடுவில் தொய்வடைகையில், பிம்ப் தொழிலை செய்யும் சைக்கோ ஒருவனை அறிமுகப்படுத்துகிறார்கள். தொடரின் மீதி எபிஸோடுகளின் சுவாரஸியத்தை அவனும், அவனது நண்பனும் பார்த்துக் கொள்கிறார்கள்.கொரிய படங்களில் பெரிய இரும்பு ராடில்தான் அடித்துக் கொள்வார்கள். சரமாரியாக கத்தியால் குத்துவதும் இருக்கும். இத்தனைக்குப் பிறகும், சத்ரியனுக்கு சாவில்லடா என்று பிழைத்து வருவார்கள். அதேபோல் குழந்தைகள் மீது அக்கறை செலுத்தாத பணக்கார பெற்றோர்கள் இருப்பார்கள். அவர்களை பழி வாங்க குழந்தைகள் அவர்கள் சொல்பேச்சிற்கு எதிர்திசையில் வினையாற்றும். மொத்த போலீஸ் டிபார்ட்மெண்டும், கேஸ் முடிந்தது என்று ஷாம்பெயின் உடைத்து கொண்டாடுகையில் ஒரேயொரு அதிகாரி மட்டும், இல்லையே, இன்னும் ஏதோ நெருடுதே என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பார். அவரே இறுதியில் உண்மையை கண்டுபிடிப்பார்.இந்த அத்தனை கிளிஷேக்களும் இந்தத் தொடரில் உண்டு. ஆனால் என்ன, போராடிக்காமல் நம்மை இந்தத் தொடர் பார்க்க வைக்கும். இரண்டாவது சீஸனுக்காகன சாத்தியத்தை வைத்து முதல் சீஸனை முடித்திருக்கிறார்கள். இரண்டாவது சீஸன் வருமா என்பது இன்னும் உறுதியாகவில்லை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: