வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. கோலமாவு கோகிலா படத்தில் இவரது நாகை ச்சுவை காட்சிகள் பேசப்பட்டன. வடிவேலு நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லியும் காமெடி செய்ய உள்ளார்.
நகைச்சுவை நடிகர்களுக்கு தமிழில் எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை . வடிவேலு படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு முதல்முறையாக தமிழ் சினிமா நகைச்சுவை வறட்சியை எதிர்கொண்டது . சந்தானம் தனது ஒன்லைன் நகைச்சுவை கவுண்டர்களை வைத்து ஓரளவு அதனை நிரப்ப முயன்றார் . அவரும் நாயகன் ஆனபிறகு யோகி பாபு வந்தார் . இப்போது புதிதாக கிடைத்திருப்பவர் ரெடின் கிங்ஸ்லி .
கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்ஸ்லியை இயக்குனர் நெல்சன் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் . அவர் சீரியஸாக செய்யும் அனைத்தும் ரசிகர்களை சிரிக்க வைத்தது . அதன் பிறகு ஒருசில படங்களில் தலைகாட்டினாலும் சமீபத்தில் வெளியான நெல்சனின் டாக்டர் படமே ரெடின் கிங்ஸ்லியை மீண்டும் பேச வைத்தது . பிளாக் க்யூமருக்கு ஏற்ற நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி . இவரை அழைத்து பாராட்டிய வடிவேலு தனது நாய் சேகர் படத்தில் ரெடின் கிங்ஸ்லியையும் இணைத்துக் கொண்டுள்ளார் .
also read : சார்பட்டா பரம்பரை மாரியம்மாவின் மாடர்ன் லுக் படங்கள்..
நான்கு வருடங்களுக்கு மேல் படம் நடிக்காமலிருந்த வடிவேலு நாய் சேகர் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார் . சுராஜ் இயக்கும் இந்தப் படத்தை லைகா தயாரி க்கிறது . வடிவேலு பிரதான வேடத்தில் நடிக்கும் இந்தப் படம் வடிவேலின் செகண்ட் இன்னிங்ஸின் தொடக்கமாக இருக்கும் என்பதால் அனைவரும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் . வடிவேலுடன் ரெடின் கிங்ஸ்லி இணைவது புதிய காமெடி ப்ளேவருக்கு உத்தரவாத் அளிக்கிறது . Published by: Tamilmalar Natarajan
First published: November 14, 2021, 12:45 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Actor Vadivelu