நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் வரும் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. சுமார் 200 முக்கிய பிரபலங்களுக்கு நட்சத்திர ஜோடிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதில் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை அதிகம் எதிர்பார்க்கிறார் நயன்தாரா. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு திருமண விழா உரிமையை விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்த நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது, தொலைபேசிகளை அரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என கூறியுள்ளனர். திருமண விழா உரிமையைப் பெற்றிருப்பதால் எந்த ஒரு புகைப்படமோ அல்லது திருமண காட்சிகளோ வெளியாகிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
இதையும் படிங்க - வித்தியாசமான லுக்கில் நிதி அகர்வால் - போட்டோஸ்
இது ஒரு புறமிருக்க திருமண விழா உரிமையை விற்பனை செய்திருப்பதால் சில நட்சத்திரங்கள் நாம் திருமணத்திற்கு செல்லலாமா அல்லது வேண்டாமா என்ற யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு சினேகா - பிரசன்னா திருமண விழாவை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்திருந்தனர். அதன் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்கள் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.
இதையும் படிங்க - விக்ரம் படத்தின் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் பரிசளித்த கமல்…
இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண உரிமை விற்பனை செய்யப்பட்டு இருப்பதால் முக்கிய பிரபலங்கள் வருவார்களா என்ற கேள்வி இருப்பதாக திரைத்துறையில் கூறுகின்றனர். இருந்தாலும் நட்சத்திர ஜோடிகள் இருவரும் தங்களுடைய நண்பர்கள் நிச்சயம் திருமணத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.