முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அருண் விஜயின் யானை படத்தில் 5 நிமிட காட்சி நீக்கம்?

அருண் விஜயின் யானை படத்தில் 5 நிமிட காட்சி நீக்கம்?

யானை படத்தில் அருண் விஜய்

யானை படத்தில் அருண் விஜய்

பல கலவையான விமர்சனங்கள் பெற்ற இந்தப் படம் ஹரியின் முந்தைய படங்களை போல விறுவிறுப்பு இதில் இல்லை என்றும் ரசிகர்கள் பரவலாக கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படத்தில் 5 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹரியின் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பல் யானை என்ற அதிரடி ஆக்சன், ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இரண்டு குடும்பம்!  அவர்களுக்குள்ளான பிரச்சனை. யார் யாரை பழிவாங்க போகிறார்கள்? என்ற ஹரியின் டெம்ப்லேட் கதைதான் யானை. இந்தக் கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் மசாலா தூவி கொடுத்துள்ளார். ராமேஸ்வரத்தில் வில்லன், ராமநாதபுரத்தில் நாயகன் குடும்பம். இவர்களுக்குள் என்ன பிரச்னை! அதனால் நாயகன் குடும்பம் என்ன ஆனது என்பதை தனக்குரிய பார்முலாவில் திரைக்கதை அமைத்து கூறியுள்ளார் ஹரி.

ஹரி படங்களில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்தப் படத்திலும் இருக்கிறது. அத்துடன் அவரின் முந்தைய படங்களின் சாயல் ஆங்காங்கே இருக்கிறது.  முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை மனதில் வைத்தே யானை படத்தை எடுத்துள்ளார் ஹரி.

Also read... யோகிபாபுவின் காண்டிராக்டர் நேசமணி படத்தின் தலைப்பில் மாற்றம்

இந்நிலையில், பல கலவையான விமர்சனங்கள் பெற்ற இந்தப் படம் ஹரியின் முந்தைய படங்களை போல விறுவிறுப்பு இதில் இல்லை என்றும் ரசிகர்கள் பரவலாக கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இதனால் யானை படத்தில் நேற்று முதல் 5 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Arun Vijay