ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வணங்கானில் சூர்யாவிற்கு பதில் பாலா தேர்வு செய்த நடிகர் இவரா? இணையத்தில் வைரலாகும் தகவல்

வணங்கானில் சூர்யாவிற்கு பதில் பாலா தேர்வு செய்த நடிகர் இவரா? இணையத்தில் வைரலாகும் தகவல்

பாலா

பாலா

படத்தின் கதையில் சில மாற்றங்களை பாலா செய்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் அந்த மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாது என்பதால் அவரை இப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், அதனால் சூர்யா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் நேற்று முன்தினம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாலா.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில் அதர்வாவை நடிக்க வைக்க இயக்குநர் பாலா முடிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

சூர்யாவின் கெரியரில் இயக்குனர் பாலா உடனான கூட்டணி முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தின. காதல் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சூர்யாவின் இமேஜை பாலாவின் நந்தா படம் அடியோடு மாற்றியது. இதன்பின்னர் தொடர்ந்து ஆக்சன் படங்களில் சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதேபோன்று பிதாமகன் திரைப்படமும் சூர்யாவுக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது. இதனால் சூர்யா – பாலா கூட்டணி அடுத்து எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில், இருவரும் வணங்கான் என்ற படத்தில் பணியாற்ற உள்ளதாக அறிவித்தனர். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, தெலுங்கில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி இடம்பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் 40 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் ஷூட்டிங்கில் எந்த டெவலப்பும் ஏற்படவில்லை. படத்தின் கதையில் சில மாற்றங்களை பாலா செய்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

Also read... திருமணத்திற்கு பிறகு நடிப்பீங்களா? - நச் பதில் கொடுத்த ஹன்சிகா!

ஆனால் அந்த மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாது என்பதால் அவரை இப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், அதனால் சூர்யா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் நேற்று முன்தினம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாலா. இருப்பினும் வணங்கான் படத்தின் பணிகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சூர்யாவிற்கு பதில் வணங்கான் படத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில் அதர்வா அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் பாலாவோ அல்லது படக்குழுவோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Atharvaa, Actor Suriya, Director bala