ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல்…

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல்…

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்திருப்பதால், அடுத்த பாகம் ரசிகர்கள் இன்னும் வியக்கும் வகையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் படத்தின் 2ஆம் பாகம் வெளியாகும் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

  மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாவலைப் படித்தவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறப்பாக வெளிவந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் புரொமோஷனுக்காக இயக்குனர் மணி ரத்னம், ஏ.ஆர். ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை பிரபலப்படுத்தினர்.

  படம் வெளியாகி 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் ரூ. 200 கோடியை தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்திராத அளவுக்கு பொன்னியின் செல்வன் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

  தமிழர்களின் அடையாளங்கள் பறிக்கப்படுவதாக வெற்றிமாறன் பேசியதற்கு சீமான் ஆதரவு… ராஜராஜ சோழன் குறித்து பரபரப்பு பேட்டி

  இந்நிலையில் படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளன. முன்பு வசூலில் சாதனை படைத்த பாகுபலி, கே.ஜி.எஃப். படங்களைப் போலவே, பொன்னியின் செல்வனும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்விரு படங்களின் அடுத்த பாகங்கள் பல சாதனைகளை முறியடித்து இன்டஸ்ட்ரி ஹிட் அடித்தவை.

  அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகமும் இன்டஸ்ட்ரி ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முதல் பாகத்தில் ஆக்சன் காட்சிகள் குறைந்த அளவே இருந்தாலும், அடுத்த பாகத்தில் இன்னும் பிரமாண்டமாக காட்சியமைப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

  இணையத்தில் நெட்டிசன்கள் வருத்தெடுக்கும் ஆதிபுருஷ் டீசர்.. மீம் மெடிரியலாக மாறிய படத்தின் டீசர்

  நடிகர்களின் உடல் தோற்றங்கள் மாறுபடும் என்பதால், பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களின் ஷூட்டிங்கையும் ஒரே கட்டமாக இயக்குனர் மணி ரத்னம் முடித்து விட்டார்.

  முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்திருப்பதால், அடுத்த பாகம் ரசிகர்கள் இன்னும் வியக்கும் வகையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 9 மாதங்களுக்குள் இரண்டாம் பாகம் வெளியாகும் என மணி ரத்னம் கூறியிருந்தார். அதற்கு முன்பாகவே பொன்னியின் செல்வன் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள், இன்னும் சில வாரங்களில் முழு வீச்சில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Ponniyin selvan