• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராஜமௌலி படத்தால் மாறிய சிரஞ்சீவி படத்தின் வெளியீட்டு தேதி

ராஜமௌலி படத்தால் மாறிய சிரஞ்சீவி படத்தின் வெளியீட்டு தேதி

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

பட வெளியீட்டை ஒரு வாரம் முன்னதாக டிசம்பர் 17-ம் தேதி வைத்துக் கொள்வது என முடிவு செய்துள்ளனர்.

  • Share this:
    ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் 2022 ஜனவரி 7-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், பல படங்கள் தங்களின் வெளியீட்டுத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளன. அதில் ஒன்று சிரஞ்சீவியின் ஆச்சார்யா.

    சிரஞ்சீவியின் 152-வது படமாக ஆச்சார்யா உருவாகியுள்ளது. கொரட்டல சிவா இயக்க, முக்கியமான வேடத்தில் ராம் சரண் நடித்துள்ளார். அப்பா சிரஞ்சீவியும் மகன் ராம் சரணும் முதன்முறையாக இதில் இணைந்து நடித்துள்ளனர். ராம் சரணே படத்தை தயாரித்துள்ளார்.

    பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் என இரு நாயகிகள். தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால் நடித்திருக்கும் வேடத்துக்கு முதலில் அணுகியது த்ரிஷாவை. அவர் கதாபாத்திரத்தில் திருப்தியில்லாமல் நடிக்க மறுக்க, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். 2020 ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

    மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் ஆச்சார்யாவை எப்போது வெளியிடுவது என்பதில் ஆரம்பம் முதலே குழப்பம் நிலவி வந்தது. இறுதியாக, கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி வெளியிடுவது என்று முடிவு செய்தனர். இந்நிலையில், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தை ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்.

    Release date of Chiranjeevi's movie changed by Rajamouli movie, SS Rajamouli, RRR Movie Release date, ss rajamouli rrr movie, ram charan, jr ntr, rrr movie release date, எஸ் எஸ் ராஜமெளலி, ஆர் ஆர் ஆர் படம், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், acharya movie review, acharya movie story, acharya release date, acharya movie, chiranjeevi acharya movie, ஆச்சார்யா திரைப்பட கதை, ஆச்சார்யா வெளியீட்டு தேதி, ஆச்சார்யா திரைப்படம், சிரஞ்சீவி ஆச்சார்யா திரைப்படம்
    சிரஞ்சீவி


    அப்படியானால் இரு வாரங்களே ஆச்சார்யாவுக்கு கிடைக்கும். ஜனவரி 7-ம் தேதி வெளியாகும் ஆர்ஆர்ஆர் அனைத்து திரையரங்குகளையும் பிடித்துக் கொள்ளும். அதனால் பட வெளியீட்டை ஒரு வாரம் முன்னதாக டிசம்பர் 17-ம் தேதி வைத்துக் கொள்வது என முடிவு செய்துள்ளனர். அன்று தான் அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடித்துள்ள புஷ்பா முதல் பாகம் திரைக்கு வருகிறது.

    ஆச்சார்யாவின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: