முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்

இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.

  • Last Updated :

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் படம் குருதி ஆட்டம். பரதேசி, இமைக்கா நொடிகள் தவிர எந்த ஹிட்டும் இல்லாத அதர்வா குருதி ஆட்டத்தை பெரிதும் நம்பி இருந்தார்.

குருதி ஆட்டம் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது.

Also read... 5 மொழிகளில் டப்பிங் பேசி அசத்திய நடிகர் விக்ரம் - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி தள்ளிப் போனது, இந்நிலையில், 'குருதி ஆட்டம்' படத்தை ஆகஸ்ட் 5-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதர்வா நடித்த 100 திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகததால் இப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Atharvaa, Entertainment