தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு இணையாக நடத்தப்படும் மற்றுமொரு களைகட்டும் போட்டி ரேக்ளா ரேஸ். தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற ரேக்ளா ரேஸ் காட்சிகளைப்பற்றிய ஒரு தொகுப்பை தற்போது குட்டி ஸ்டோரியில் காணலாம்.
திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு என்றுமே தோள் கொடுப்பவர் விஜயகாந்த். இப்படி திரைப்பட கல்லூரி மாணவர்களுடன் அவர் நடித்த திரைப்படம் ‘உழவன் மகன்’. ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த் இரு வேடம் ஏற்று நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ரேக்ளா பந்தயக் காட்சி தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட ரேக்ளா பந்தய காட்சியானது. இதுவரை வந்த தமிழ் சினிமாக்களிலேயே இப்படியொரு ரேக்ளா பந்தய காட்சி அமைக்கப்பட்டிருக்கவில்லை என சொல்லும்படி ரசிகர்களை புலகாங்கிதம் அடைய வைத்தது அந்த காட்சி.
ரேக்ளா பந்தயம் களைகட்டிய சினிமாக்களில் திரையரங்கை ரசிகர்களின் விசில் சத்தத்தில் அதிர வைத்த திரைப்படம் விஜய் - சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘பிரண்ட்ஸ்’. ஆரம்ப காட்சியிலேயே தாவி ஓடிவந்து ரேக்ளா வண்டியில் அமரும் விஜயின் அதிரடியில் அரங்கத்தில் அனல் பறந்தது. எப்படியும் நாயகன்தான் பந்தயத்தில் வேற்றி பெறுவார்..ஆனால் எளிதாக அது நடந்து விடுமா..? ஆம் ..வில்லன்களின் கைங்கர்யத்தில் விஜய் ஓட்டும் ரேக்ளா வண்டியின் அச்சாணி கழட்டப்பட்டிருக்கும்.. இருந்தும் ஒற்றை சக்கரத்தில் ரேக்ளா வண்டியை விரட்டி எல்லைக்கோட்டை தொட்டு ரசிகர்களை அப்போதே பிகில் அடிக்க வைத்திருப்பார் விஜய்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ரேக்ளா பந்தய போட்டி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. ரேக்ளா பந்தயம் தொடங்கிவிட சிறிது நேரம் கழித்துதான் மாஸ் என்ட்ரியுடன் களம் புகுவார் கார்த்தி.
இரட்டை மாடுகள் வண்டியை இழுத்துக்கொண்டு ஓட, ஓடியபடியே தாவி குதித்து வண்டியில் அமர்ந்து பூட்டிய மாடுகளை விரட்டும் நாயகன் கார்த்தி பரபரப்பான பந்தயத்திற்கு பிறகு முதல் ஆளாக எல்லை கோட்டை தொட்டு ரேக்ளா நாயகனாக ஆரவாரப் படுத்தியிருப்பார்.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.