Regina Cassandra: கொரியன் ரீமேக்கில் நடிக்கும் ரெஜினா!

Regina Cassandra: கொரியன் ரீமேக்கில் நடிக்கும் ரெஜினா!

நடிகை ரெஜினா

விஷாலின் சக்ரா படத்தில் நடித்திருந்த ரெஜினாவுக்கு தற்போது வேறு படங்கள் இல்லை.

  • Share this:
    தென்கொரியாவில் தயாரான படத்தின் அதிகாரப்பூர்வ தழுவலில் ரெஜினா நடிக்கிறார்.

    பிறமொழிப் படங்களை தழுவி படம் எடுப்பது சினிமா கண்டுபிடித்த நாளிலிருந்து இருக்கிறது. பெரும்பாலும் காசு கொடுக்காமல் திருட்டுத்தனமாக தழுவுவார்கள். இணையம் வந்து, உலகம் சுருங்கிய பின், எந்த மூலையில் யார் காப்பி அடித்தாலும் கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை உருவான பிறகு காசு கொடுத்து தழுவ ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்ல முன்னேற்றம். மூளையை கசக்கி கதை எழுதியவருக்கு பெயரும், படமெடுத்தவர்களுக்கு பணமும் கிடைக்கும்.

    ’மிஸ் கிரானி’ கொரிய படத்தின் தழுவலில் சமந்தா நடித்தது நினைவிருக்கலாம். அப்படம் ’ஓ பேபி’ என்ற பெயரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு கொரியன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். ரெஜினா இதில் நடிக்கிறார். எந்தப் படம் என்று அறிய விரும்புகிறவர்களுக்கு. 2017-ல் வெளியான மிட்நைட் ரன்னர்ஸ். ஜேசன் கிம் இயக்கம். மிஸ் கிரானி தெலுங்கில் தயாராகி தமிழில் வெளியானது போல், இந்தப் படம் தெலுங்கில் தயாராகி தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் வெளியாகும்.

    விஷாலின் சக்ரா படத்தில் நடித்திருந்த ரெஜினாவுக்கு தற்போது வேறு படங்கள் இல்லை. அவர் நடித்த கசடதபற, வெங்கட் பிரபுவின் பார்ட்டி இரண்டும் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், அவருக்கு தெலுங்கில் இந்த கொரியன் ரீமேக் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இந்த ரீமேக்கிற்கு ஷாகினி தாகினி என்று பெயர் வைத்துள்ளனர். ரெஜினாவும், நிவேதா தாமஸும் பயற்சி போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றனர். ஆக்ஷன் கலந்த காமெடிப் படமாக இது தயாராகிறது.
    ஓ பேபி படத்தை தயாரித்தவர்களே இப்படத்தையும் தயாரிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: