ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சமந்தா பாடலைத் தொடர்ந்து ரெஜினா பாடலுக்கும் எதிர்ப்பு!

சமந்தா பாடலைத் தொடர்ந்து ரெஜினா பாடலுக்கும் எதிர்ப்பு!

சிரஞ்சீவி - ரெஜினா

சிரஞ்சீவி - ரெஜினா

ஆச்சார்யா படத்தில் ரெஜினா ஆடியிருக்கும் சானா கஷ்டம் பாடல் வரிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புஷ்பாவில் இடம்பெற்ற சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலின் வரிகள் சர்ச்சைக்குள்ளானது போல் ஆச்சார்யா படத்தில் ரெஜினா ஆடியிருக்கும் பாடல் வரிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புஷ்பா படத்தின் ஹைலைட்டாக அமைந்த விஷயம் சமந்தாவின் நடனம். ஊ சொல்றியா மாமா என்ற விவேகாவின் வரிகளில் அமைந்த பாடலுக்கு ஆண்கள் நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆண்களை அப்பாடலின் வரிகள் தரக்குறைவாக விமர்சிப்பதாக அவர்கள் கண்டித்திருந்தனர். ஆனால், ஆண்களே இதனைப் பொருட்படுத்தவில்லை. பாடல் பல கோடிமுறை யூடியூபில் கேட்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலைத் தொடர்ந்து ஆச்சார்யா படத்தில் ரெஜினா ஆடியிருக்கும் சானா கஷ்டம் பாடல் வரிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுவும் ஆண்கள் தான், ஆனால் மருத்துவர்கள். இன்றைய இளைஞர்கள் ஆர்எம்பி டாக்டர்களாக விரும்புவதாகவும், காரணம், அவர்களுக்கு தான் அழகு சிகிச்சை என்ற பெயரில் நடிகைகளை தொட்டு சிகிச்சை அளிக்க முடியும் என்ற விதத்தில் அந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாடல் வரிகளை மாற்ற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என பல நிபந்தனைகள் விதித்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் ரெஜினாவுடன் சிரஞ்சீவியும் ஆடியுள்ளார். ஆக, எதிர்ப்பு அவருக்கும் சேர்த்துதான்.

ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

சமந்தா பாடல் அளவுக்கு ரெஜினாவின் சானா கஷ்டம் பிரபலமாகவில்லை. இந்த எதிர்ப்பின் மூலம் சானா கஷ்டத்தையும் சாதனைப் பாடலாக்கிவிடுவார்கள், சந்தேகமில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Regina Cassandra, Samantha