Nivetha Thomas-Regina Cassandra: அந்தர் பல்டிக்கு தயாராகும் ரெஜினா, நிவேதா தாமஸ்!

ரெஜினா - நிவேதா

காமெடி ஆக்ஷன் படமான இதில் வரும் முக்கிய ஆண் கதாபாத்திரங்களை, பெண்களாக மாற்றி தெலுங்கில் எடுக்கின்றனர்.

  • Share this:
    நிவேதா தாமஸ் கிட்டத்தட்ட தெலுங்கு நடிகையாகி விட்டார். மலையாளம், தமிழை விட ஆந்திரக்காரர்களே அவரது திறமையை மதிக்கிறார்கள். தொடர்ந்து அங்கு படங்கள் வருகின்றன. சாகினி தாகினி என்ற புதிய தெலுங்குப் படத்தில் நிவேதா தாமஸ் ரெஜினாவுடன் நடிக்கிறார்.

    ஆமாம், இது நாயகிகள் மைய ப்படம்தான். நிவேதா தாமஸும், ரெஜினாவும்தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். 2017-ல் வெளி வந்த தென்கொரிய படமான மிட்நைட் ரன்னர்ஸை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. பணம் கொடுத்து முறைப்படி கொரிய படத்தின் உரிமையை வாங்கி தான் எடுக்கிறார்கள். தெலுங்கில் இயக்குகிறவர் சுதீர் வர்மா.

    மிட்நைட் ரன்னர்ஸில், போலீஸ் அகடாமியில் பயிற்சி பெறும் இரு மாணவர்கள் ஒருநாள் இரவில் ஒரு இளம் பெண்ணை சிலர் கடத்துவதை கவனிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அந்த கடத்தல் பேர்வழிகள் குறித்து விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். பெண்களை கடத்தும் பெரிய கும்பல் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். சில பல தோல்விகளுக்குப் பிறகு கடுமையான பயிற்சி எடுத்து, அந்தக் கும்பலை எப்படி கூண்டோடு பிடிக்கிறார்கள் என்பது கதை. காமெடி ஆக்ஷன் படமான இதில் வரும் முக்கிய ஆண் கதாபாத்திரங்களை பெண்களாக மாற்றி தெலுங்கில் எடுக்கின்றனர். அதில் தான் ரெஜினாவும், நிவேதா தாமஸும் நடிக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மிட்நைட் ரன்னர்ஸின் சுவாரஸியமே அதில் வரும் நகைச்சுவையும், சண்டைக் காட்சிகளும்தான். அதனால்தான், ரெஜினாவுக்கும், நிவேதா தாமஸுக்கும் மிட்நைட் ரன்னர்ஸ் படத்தின் சண்டைப் பயிற்சியாளரை வைத்து பயிற்சி கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். அந்தர் பல்டியடிக்காமல் ஆக்ஷன் ஹீரோயின் ஆக முடியுமா? அதற்காகத்தான் இருவரும் கடும் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

    சாகினி தாகினியை தமிழிலும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: