ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடுகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்...

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிடுகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்...

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

Vendhu Thaninthadhu kaadu : உலகம் முழுவதும் மெகா ஹிட்டான விக்ரம் திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படம் திரைக்கு வருவதால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வரலாறை தெரிந்து கொள்வது முக்கியம் -'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு!

செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இணைந்திருந்தது.

வெந்து தணிந்தது காடு படத்தில், வெவ்வேறான கேரக்டர்களில் சிம்பு நடித்து இருக்கிறார்.  அவருக்கு ஜோடியாக நடிகை சிதி இத்னானி படத்தில் இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்… வியப்பில் ரசிகர்கள்

ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்று விடுகின்றன. உலகம் முழுவதும் மெகா ஹிட்டான விக்ரம் திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தையும் கையில் எடுத்திருக்கிறது.

அடுத்ததாக தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் கோப்ரா படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது.

First published:

Tags: AR Rahman, Gautham Vasudev Menon, Simbu, Udhayanidhi Stalin