• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalapathy Vijay: கேரளா பாக்ஸ் ஆபிஸில் விஜய் படங்களின் சாதனை!

Thalapathy Vijay: கேரளா பாக்ஸ் ஆபிஸில் விஜய் படங்களின் சாதனை!

விஜய்

விஜய்

மம்முட்டி, திலீப், பகத் பாசில், பிருத்விராஜ் போன்ற மலையாளத்தின் முன்னணி நடிகர்களின் படங்களைத் தாண்டி முதல்நாள் வசூலில் விஜய்யின் படங்கள் இடம்பிடித்திருப்பது சாதாரண சாதனை அல்ல.

  • Share this:
    கேரளாவில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்து அதிக ரசிகர்கள் உள்ள நடிகர் விஜய். திலீப், பிருத்விராஜ், பகத் பாசில், நிவின் பாலி என பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்று வந்தால் போட்டி மோகன்லாலுக்கும், விஜய்க்கும் தான். முதல்நாள் கலெக்ஷனில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மலையாளப் படங்களில் இரண்டு விஜய் நடித்தவை.

    கேரளாவில் தமிழ்ப் படங்கள் தமிழிலேயே வெளியாகும். மலையாளத்தில் மொழி மாற்றம் செய்வதில்லை. கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு இணையாக மலையாளிகளும் விஜய் படத்தை ரசிக்கிறார்கள். இதுவரை கேரளாவில் முதல்நாள் வசூலில் சாதனைப் படத்தை ஐந்து படங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

    5. பாகுபலி 2

    பாகுபலி படத்தின் வெற்றியின் காரணமாக பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பாகுபலி 2 மலையாளத்தில் வெளியானது. இப்படம் கேரளாவில் முதல் நாளில் 5.48 கோடிகளை வசூலித்தது.

    4. மெர்சல்

    விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் கேரளாவில் முதல்நாளில் சுமார் 6.11 கோடிகளை வறாலித்து நான்காவது இடத்தில் உள்ளது. மெர்சல் கேரளாவில் றாப்பர்ஹிட்டானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    3. சர்கார்

    மூன்றாவது இடத்தில் சர்கார் உள்ளது. விஜய் படங்கள் வெளியாகும் போது, அதன் முந்தையப் படங்களின் வசூலை சாதாரணமாக முறியடிக்கின்றன. சர்காரிலும் அதுதான் நடந்தது. மெர்சல் வசூலை சர்கார் முறியடித்தது. சர்கார் கேரளாவில் முதல்நாளில் 6.62 கோடிகளை வசூலித்தது.

    2. லூசிஃபர்

    மோகன்லாலின் லூசிஃபர் முதல்நாள் வசூலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிருத்விராஜ் இயக்கிய இத்திரைப்படம் முதல்நாளில் 6.70 கோடிகளை வசூலித்தது.

    1. ஒடியன்

    இதுவும் மோகன்லால் நடித்தது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல்நாளில் 7.20 கோடிகளை வசூலித்தது. ஆனாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை.

    மம்முட்டி, திலீப், பகத் பாசில், பிருத்விராஜ் போன்ற மலையாளத்தின் முன்னணி நடிகர்களின் படங்களைத் தாண்டி முதல்நாள் வசூலில் விஜய்யின் படங்கள் இடம்பிடித்திருப்பது சாதாரண சாதனை அல்ல. இந்த ஐந்து திரைப்படங்களில் விஜய் படம் தவிர்த்த மூன்று படங்களும் மலையாளத்தில் வெளியானவை. விஜய்யின் மெர்சல், சர்கார் தமிழில் வெளியான படங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: