• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • படப்பிடிப்பு முடியும் முன்பே 180 கோடிகள் லாபம் சம்பாதித்த ஷங்கர் படம்...?

படப்பிடிப்பு முடியும் முன்பே 180 கோடிகள் லாபம் சம்பாதித்த ஷங்கர் படம்...?

தமன், ஷங்கர், ராம் சரண்

தமன், ஷங்கர், ராம் சரண்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் தயாராகி வரும் படம் படப்பிடிப்பில் உள்ள நிலையில், படத்தை பிரபல நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஷங்கர் தமிழ் தவிர ஒரேயொரு இந்திப் படத்தை மட்டும் இயக்கியுள்ளார். அனில் கபூர் நடித்த நாயக். ஷங்கரின் முதல்வன் படத்தின் இந்தி ரீமேக். முதல்முறையாக தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார். ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ரகுமான் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு புனேயில் தொடங்கியது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

தமன் முதல்முறையாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். இது பான் - இந்தியா திரைப்படமாக தயாராகிறது. அதாவது தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் வெளியாகும். கன்னடம், மலையாளத்தில் டப் செய்து வெளியிடவும் வாய்ப்பு உள்ளது. தில் ராஜு படத்தை தயாரித்து வருகிறார்.

பொதுவாக ஷங்கர் தனது படங்களுக்கு உத்தேச பட்ஜெட்டை கொடுப்பதே வழக்கம். அதற்குள் ஒருபோதும் படத்தின் பட்ஜெட் நின்றதில்லை. அதேபோல் படம் எப்போது முடிவடையும் என்பதையும் சொல்வதில்லை. முதல்முறையாக ராம் சரண் படத்தின் பட்ஜெட் 170 கோடிகள் என திட்டவட்ட நம்பர் ஒன்றை கூறியுள்ளார். இதுதான் மொத்த பட்ஜெட். அதேபோல் படத்தை எப்போது முடிப்பார் என்பதையும் அவர் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளதாக கேள்வி.

Also read... மீண்டும் சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்...?

படம் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் ஸீ ஸ்டுடியோஸ் படத்தின் அனைத்து மொழிகளுக்கான திரையரங்கு, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை 350 கோடிகளுக்கு வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது பட்ஜெட்டைவிட ஒரு மடங்கு அதிகம். இதில் ரீமேக், வெளிநாடு மற்றும் இசை உரிமை சேர்த்தியில்லை. இந்த செய்தி உண்மையாக இருந்தால் இந்த வருடத்தின் மிகப்பெரிய ரிஸ்க் இல்லாத லாபம் ஷங்கரின் படமாகத்தான் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: