Home /News /entertainment /

நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை நீக்கிய சமந்தா - காரணம் இது தானாம்

நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை நீக்கிய சமந்தா - காரணம் இது தானாம்

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

சில தினங்கள் முன்பு சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை திடீரென இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியிருந்தார் சமந்தா.

    நடிகை சமந்தா நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியதும், அவர்கள் மீண்டும் இணைகிறார்களா என குழப்பத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். தற்போது அது குறித்த முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    Dhanush: தனுஷுக்கு ரஜினிகாந்த் கொடுத்த பரிசு... அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா?

    இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் சைத்தன்யாவுடனான படங்கள் அனைத்தையும் நீக்கினார் சமந்தா. ஆனால் நாக சைத்தன்யா இன்னும் படங்களை நீக்கவில்லை. இதற்கிடையே சில தினங்கள் முன்பு சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை திடீரென இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியிருந்தார் சமந்தா. இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இது குறித்த தகவலொன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால், தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது என்று நீக்கியது தான் காரணமாம். தனக்கு தேவையில்லாத எதுவும் இன்ஸ்டாகிராமில் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் அந்த பிரிவு அறிவிப்பை நீக்கினாராம் சமந்தா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Samantha, Samantha

    அடுத்த செய்தி