ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?

Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Dhanush Aishwarya Divorce: அண்மையில் பிறந்தநாள் விழா ஒன்றில் ஐஸ்வர்யாவிற்காக தனுஷ் பாடும் வீடியோ சமூக வளைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரின் மனமுறிவு திரைத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கஸ்தூரிராஜாவின் மகனான நடிகர் தனுஷ் 2002-ம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர். தனுஷ் திரைத்துறையில் அறிமுகமான காலகட்டத்திலேயே நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பை பெற்றதன் மூலம் இருவருக்கும் இடையே காதல் உருவானது. தேவதையை கண்டேன் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த போது,  தனுஷ் - ஐஸ்வர்யா காதல் விவகாரம் தமிழ் திரையுலகில் பூதாகரம் எடுக்க, 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

தனுஷ் 22 வயதை எட்டியபோது 24 வயது அடியெடுத்து வைத்திருந்த ஐஸ்வர்யாவை மணம் முடித்தார். ஐஸ்வர்யாவை விட இரண்டு வயது இளையவரான தனுஷ், ரஜினியின் மகளை திருமணம் செய்துகொண்டது அன்றைய நாளில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும் நடிக்க வந்த குறுகிய காலத்தில் 22 வயதில் தனுஷ் திருமணம் செய்து கொண்டதும் அன்றைய தினத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

தனுஷ் திரை வாழ்க்கையில் பல்வேறு கிசுகிசுக்களில் அடிபட்ட போதும் 2012-ல் ஐஸ்வர்யா இயக்கிய 3 திரைப்படத்தின் போது கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் உடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார். அந்த சமயத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக பெரும்பாலான பத்திரிக்கை செய்திகள் வெளியானது. எனினும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த உறவு சுமூக நிலையை எட்டியது.

நடிகர் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தம்பதி 2016-ம் ஆண்டில் மணமுறிவு ஏற்பட்டு பிரிந்தபோது, சௌந்தர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி தனுஷ் ட்விட்டரில் பதிவு செய்தது அன்றைய நாளில் பரபரப்பாக பேசப்பட்டது. தனுஷின் வாழ்த்தை ஏற்றுக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் அதனை வரவேற்று ரீடிவீட் செய்ததும் பரவலாக கவனிக்கப்பட்டது. இதன் பின்னர் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் திருமணத்தின் போதும் ரஜினியின் மூத்த மருமகன் என்ற அடிப்படையில் அந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார் நடிகர் தனுஷ்.

Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

தனுஷ் நடிக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து முத்தக் காட்சிகள் இடம் பெறும் நிலையில், இது அவரது குடும்ப வாழ்க்கையில் பூகம்பங்கள் ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியானாலும் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இணைந்து பொது நிகழ்ச்சிகளில் தோன்றி தங்கள் உறவு சுமூகமாக இருப்பதை நிரூபித்து வந்தனர்.

இதையும் படிங்க - Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா


அக்கா ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த செளந்தர்யா ரஜினிகாந்த்!

அண்மையில் பிறந்தநாள் விழா ஒன்றில் ஐஸ்வர்யாவிற்காக தனுஷ் பாடும் வீடியோ சமூக வளைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதற்கிடையே ஒரு நடிகையுடன் தனுஷ் அதிக நெருக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் ஒரே செய்தியை ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்கள் மணமுறிவை உறுதி செய்துள்ளனர்.

ஏறத்தாழ 18 ஆண்டுகள் நீடித்த பந்தம் நிறைவடைவதாக இருவரும் வெளியிட்டுள்ள செய்தி, திரைத்துறையிலும் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush