ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் வைத்த ட்விஸ்ட் - வாரிசும் துணிவும் ஒரே நாளில் வெளியாவதற்கு காரணம் இதுதான்

விஜய் வைத்த ட்விஸ்ட் - வாரிசும் துணிவும் ஒரே நாளில் வெளியாவதற்கு காரணம் இதுதான்

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

இரு படக்குழுவும் அவர்கள் அறிவிக்கட்டும் என இவர்களும், இவர்கள் அறிவிக்கட்டும் என அவர்களும் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ் சினிமாவில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதுகின்றன. இந்த திரைப்படங்களின் வெளியீட்டு தேதிக்குப் பின் நடந்த சுவாரசியமான விஷயங்களை பார்க்கலாம்.

விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றன. இரு முன்னணி நடிகர்களின் படங்களும் ஒரே சமயத்தில் வெளியாவதால் அந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் எந்த தேதியில் வெளியாகிறது என்பதை இரு படக்குழுவினரும் வெளியிடாமல் இருந்தனர்.பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வெளியீட்டு தேதியும் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இரு தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் இருந்தது.

ரசிகர்களும் திரை வர்தகர்களும் இரு படங்களின் வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தாலும், படக்குழுவினர் அமைதியாகவே இருந்தனர். அதேபோல் டிசம்பர் 30 வரை டிரைலரும் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகைக்கு 15 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் டிரைலரை எதிர்பார்த்திருந்த இருதரப்பு ரசிகர்களுக்கும் சலிப்படைந்தனர். அந்த நிலையில் தான் துணிவு திரைப்படத்தின் டிரைலரை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டனர். இந்த டிரைலர் வெளியானாலும், அதில் படத்தின் வெளியிட்டு தேதி இடபெறவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்தார்கள்.

இந்த நிலையில் வாரிசு டிரைலர் ஜனவரி 2-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான டிரைலரும் தயாராக இருந்தது. ஆனால் திடீரென அதில் சில மாற்றங்களை செய்ய வம்சி முடிவெடுத்தார். அதனால் இரண்டு நாட்கள் கழித்து வாரிசு டிரைலர் வெளியானது. விஜய் ரசிகர்கள் தங்களுடைய வெளியீட்டு தேதி இடம்பெறும் என நம்பினர். ஆனால் அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இரு படக்குழுவும் அவர்கள் அறிவிக்கட்டும் என இவர்களும், இவர்கள் அறிவிக்கட்டும் என அவர்களும் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வாரிசு டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாவதாக போனி கபூர் அறிவித்தார். இதனால் வாரிசு 12ஆம் தேதி வரும் என அனைவரும் நம்பினர். ஆனால் அங்கு டிவிஸ்ட் ஒன்றை விஜய் வைத்தார். அதுவும் வாரிசு படமும் 11-ம் தேதி வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் தில்ராஜுவிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. விஜய்யின் முடிவுக்கு தயாரிப்பாளர் சம்மதித்தார். ஆனால் வாரிசு படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் பிரீமியர் காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை நடந்து விட்டது, இனி மாற்ற முடியாது எனவும் கூறினர். இதை தில்ராஜு, விஜய்யிடம் கூற பேச்சு வார்த்தை தொடர்ந்தது. இருந்த போதிலும் ஜனவரி 11ஆம் தேதி தன்னுடைய படம் வெளியாக வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தார். அதன்படியே தற்போது ஜனவரி 11-ம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

First published:

Tags: Thunivu, Varisu