முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஹோலி டே மட்டுமல்ல... ரஜினிகாந்த் டே - எப்படி தெரியுமா? கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

ஹோலி டே மட்டுமல்ல... ரஜினிகாந்த் டே - எப்படி தெரியுமா? கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

. இந்த நாளில் கே.பாலசந்தர் தாத்தாவை நினைவுகூர்கிறேன். எனக்கு இது ரஜினிகாந்த் நாள். என்று குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ஜெயிலர் படத்தில் 90 சதவிகிதிம் பணிகளை ரஜினிகாந்த் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் இருவரும் முதன்மை வேடத்தில் நடித்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துவருகிறார். இந்தப் படத்தில் பிரபல நடிகை ஜீவிதா ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தமிழில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் லால் சலாம் பட அனுபவத்தை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்தப் பதிவு நேற்று பதிவிட்டிருக்க வேண்டியது. ஆனால் எனக்கு நேரமில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். முதல் நாள் 16 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது. சில மணிநேரங்களுக்கு பிறகே நாம் இதனை கொண்டாட தகுதியானவர்கள் என்பதை உணர்ந்தேன். ஹோலி என் மனதுக்கு நெருக்கமான பண்டிகை. இந்த நாளில் கே.பாலசந்தர் தாத்தாவை நினைவுகூர்கிறேன். எனக்கு இது ரஜினிகாந்த் நாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹோலி அன்று தான் சிவாஜி ராவ்விற்கு ரஜினிகாந்த் என கே.பாலசந்தர் பெயர் சூட்டினார். தொடக்க காலங்களில் நடிகர் ரஜினிகாந்த் ஹோலி அன்று பாலசந்தரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தாராம். இதனை அவரே பல நிகழ்வுகளில் தெரிவித்திருக்கிறார்.

First published:

Tags: Rajinikanth