முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழால் இணைவோம்... சிம்பு, அனிருத் ட்வீட்டின் பின்னணி இதுதான்!

தமிழால் இணைவோம்... சிம்பு, அனிருத் ட்வீட்டின் பின்னணி இதுதான்!

சிம்பு - அனிருத்

சிம்பு - அனிருத்

ஒருவேளை சிம்புவும், தனுஷும் புதிதாக இசை ஆல்பம் எதுவும் உருவாக்கியிருக்கிறார்களா? என யோசிக்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் சிம்புவும், இசையமைப்பாளர் அனிருத்தும் தமிழால் இணைவோம் என ட்வீட் செய்ததையடுத்து அதன் பின்னணி குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி தான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்றார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும் தங்கள் கண்டனத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். அப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது சமூக வலைதளத்தில் தமிழன்னையின் ஓவியத்தைப் பகிர்ந்து ’தமிழணங்கு’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது இந்திய அளவில் பேசு பொருளானது.

இதன் தொடர்ச்சியாக நேற்று நடிகர் சிம்புவும், இசையமைப்பாளர் அனிருத்தும் தமிழால் இணைவோம் என ட்வீட் செய்திருந்தனர். இந்தி திணிப்புக்கு எதிராகத்தான் அவர்கள் இவ்வாறு தெரிவித்ததாக பரவலாக கருத்துகள் எழுந்தது.

தமிழால் இணைவோம்... ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு!

இதையடுத்து சிம்பு ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் இருக்கும் ஒரு படட்தைப் பகிர்ந்து, ’உங்களுக்காக ஒரு புது அப்டேட். புது ஆரம்பம்’ எனத் தெரிவித்திருந்தார். அனிருத்தும் தனது புதிய படத்தைப் பகிர்ந்து புதிய கூட்டணியில் உற்சாகமாக இருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

Beast Story: வீரராகவனாக விஜய்... பீஸ்ட் கதை இதுதான்!

’வந்தாங்க, ட்வீட் போட்டாங்க, ட்ரெண்ட் ஆகுது, ரிப்பீட்டு. என்ன நடக்குது பிரதர்ஸ். தமிழால் இணைவோம்ன்னா என்ன?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. அதற்கு என்ன சொல்லிடலாமா? என அனிருத்தை டேக் செய்து கேட்டுள்ளார் சிம்பு.

ஒருவேளை சிம்புவும், தனுஷும் புதிதாக இசை ஆல்பம் எதுவும் உருவாக்கியிருக்கிறார்களா? என யோசிக்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள். தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது, ’ஆஹா ஓடிடி இயங்குதளம் தமிழ் மொழியில் லான்ச் செய்யப்பட உள்ளது. இதனை ப்ரோமோஷன் செய்யும் விதமாக தான் நடிகர் சிம்பு மற்றும் அனிருத் தமிழால் இணைவோம் என்று ட்வீட் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனை ஏப்ரல்-14ம் தேதி தமிழக முதல்வர் அதிகாரபூர்வமாக லான்ச் செய்யவிருக்கிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Anirudh, Simbu