Home /News /entertainment /

பிக்பாஸ் அல்டிமேட்டில் ஓவியா கலந்து கொள்ளாததற்கு காரணம் இது தான்

பிக்பாஸ் அல்டிமேட்டில் ஓவியா கலந்து கொள்ளாததற்கு காரணம் இது தான்

ஓவியா

ஓவியா

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் லைவாக ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட்டில் லட்சக்கணக்கான ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா கலந்து கொள்ளவில்லை

    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் கோலாகலமாக தொடங்கி உள்ளது. நேற்று பிக்பாஸ் அல்டிமேட் சீசனின் முதல் நாள் முதல் எபிசோடை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் நடப்பது போல ஒவ்வொரு போட்டியாளர்களும் அறிமுகமாகி, கமல்ஹாசனுடன் உரையாடி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். பிக்பாஸ் அல்டிமேட்டில் நடிகை ஓவியா கலந்து கொள்வார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியுமா?

    பிக்பாஸ் அல்டிமேட்டைப் பொறுத்தவரை அதன் போட்டியாளர்கள் தான் மிகப்பெரிய அட்ராக்ஷனாக இருக்கிறார்கள் . சீசன் 1-லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2-லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3-ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4-லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5-ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபினய் ஆகியோர் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளனர்.

    சீசன் 5-ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ள நிலையில் இவர்கள் இப்போது தான் சீசன் 5 ல் இருந்து வெளியேறினார்கள். உடனேயே ஏன் அல்டிமேட்டில் கலந்துகொள்கிறார்கள் என்று பலரும் அதிருப்தி தெரிவித்து வந்துள்ளனர்.

    டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் லைவாக ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட்டில் லட்சக்கணக்கான ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா கலந்து கொள்ளவில்லை. போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி முடியும் வரையில், ஓவியா இறுதிக்கட்டத்திலாவது வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஓவியா இந்த 14 போட்டியாளர்களில் இல்லை என்பது தெரிந்துவிட்டது. சரி ஓவியா ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

    பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பற்றி தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே ஓவியவைப் பற்றிய செய்தி வெளியானது. மற்ற போட்டியாளர்கள் குவாரண்டைனில் இருக்கும் பொழுது ஓவியாவுக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு சில நாட்களில் ஓவியா முழுவதுமாக உடல் நலம் தேறிவிட்டால் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

    ஓவியாவை போலவே அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மற்ற போட்டியாளர் சீசன் 1-ல் இருந்த பரணி. ஆனால் அவரும் இறுதி நேரத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி வெளியானது. மேலும் சீசன் 3 ல் இருந்து ஷெரின் கலந்து கொள்வார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தற்போது 14 போட்டியாளர்கள் உடன் தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட்டில் இரண்டு வைல்ட் கார்டு எண்ட்ரிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா... என்ன காரணம்?

    இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் நாள் முழுவதும் லைவாகவும், 1 மணி நேரம் எடிட் செய்யப்பட்ட நிகழ்ச்சியின் தொகுப்பு ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil

    அடுத்த செய்தி