• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இசையமைப்பாளர் தமனை அவமதித்தாரா பிரபல ஹீரோ...?

இசையமைப்பாளர் தமனை அவமதித்தாரா பிரபல ஹீரோ...?

 தமன்

தமன்

தமன் இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தாலும் சினிமாவில் அவர் நடிகராகவே அறிமுகமானார். அதுவும் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்றைய தேதியில் தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தமன். தெலுங்கில் ஷங்கர் இயக்கிவரும் ராம் சரண் படத்துக்கும் தமன் இசையமைக்கிறார். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் படத்துக்கும் இசையமைப்பாளராக தமன் பெயர் அடிபடுகிறது. தெலுங்கின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருக்கும் தமனின் இசை பிடிக்கவில்லை என்று பிரபல ஹீரோ அதிருப்தி வெளியிட்டது தற்போது தெரியவந்துள்ளது.

தமன் இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தாலும் சினிமாவில் அவர் நடிகராகவே அறிமுகமானார். அதுவும் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில். சமீபத்தில் தெலுங்கில் வெளியான பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். அதன் பின்னணி இசைக்காக பவன் கல்யாண் ரசிகர்கள் தமனை கொண்டாடினர். தற்போது தயாராகிவரும் பவன் கல்யாணின் பீம்ல நாயக், பாலகிருஷ்ணாவின் அகண்டா, மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா என அனைத்துக்கும் தமனே இசை.

இந்த வருடம் செப்டம்பர் 10 வெளியான நானியின் தக் ஜெகதீஷ் படத்துக்கும் தமன் இசையமைத்தார். இரண்டு பாடல்களுக்கு அவர் இசையமைத்த நிலையில் படத்திலிருந்து விலகினார். மீதிப் பாடல்களும், பின்னணி இசையும் அமைத்தவர் இசையமைப்பாளர் கோபி சுந்தர். தமன் ஏன் விலகினார் என்பதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. தற்போது அவரே அதனை வெளியிட்டுள்ளார்.

"இரண்டு பாடல்களை முடித்த நான். பின்னணி இசையையும் முழுமையாக முடித்துக் கொடுத்தேன். ஆனால், படத்தின் நாயகன் நானிக்கு பின்னணி இசை பிடிக்கவில்லை. அதனால், படத்திலிருந்து வெளியேறினேன். எல்லாப் படங்களையும் போலதான் அந்தப் படத்துக்கும் முழு ஈடுபாட்டுடன் இசையமைத்தேன். எந்த இடத்தில் இசை அவர்களுக்குப் பிடிக்காமல் போனது தெரியவில்லை" என பேட்டியொன்றில் தமன்  கூறியுள்ளார்.



இசை பிடிக்கவில்லை என இசையமைப்பாளரை மாற்றுவது சினிமாவில் புதிதல்ல. கடைசி விவசாயி படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை தனது படத்துக்கு ஒத்துவரவில்லை என்று வெளிநாடு சென்று வேறு இசைக்கலைஞர்களை வைத்து பின்னணி இசை அமைத்துக் கொண்டார் இயக்குனர் மணிகண்டன். தீபாவளிக்கு வெளியான எனிமி படத்தின் பாடல்கள் தமன். அவருக்கு நேரமில்லை என்பதால் பின்னணி இசையை சாம் சிஎஸ் பார்த்துக் கொண்டார். படத்தில் இருவர் பெயரும் வரும்.

Also read... சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்...!

ஆனால், தக் ஜெகதீஷில் இசை பிடிக்கவில்லை என்று நானி கருதியதால் தமன் வெளியேறியிருக்கிறார். பவன் கல்யாண், மகேஷ்பாபு, பாலகிருஷ்ணா, இப்போது ஷங்கர் படம் என முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் படங்களுக்கு இசையமைத்துவரும் தமனின் இசையில் நானிக்கு திருப்தியில்லை என்பது தெலுங்கு சினிமாவில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமன் ரசிகர்கள் நானி மீது விமர்சனங்களும் வைத்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: