Home /News /entertainment /

‘நல்ல கதை அமைந்தால் மீண்டும் வில்லனாக நடிப்பேன்’ - அருண் விஜய் பேட்டி

‘நல்ல கதை அமைந்தால் மீண்டும் வில்லனாக நடிப்பேன்’ - அருண் விஜய் பேட்டி

கடலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யானை படத்தின் ஹீரோ அருண் விஜய், இயக்குனர் ஹரி.

கடலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யானை படத்தின் ஹீரோ அருண் விஜய், இயக்குனர் ஹரி.

Yaanai Movie : யானை படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    கதாநாயகனாக மட்டுமில்லாமல் நல்ல கதை அமைந்தால் மீண்டும் வில்லனாக நடிப்பேன் என கடலூரில் அருண் விஜய் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

    நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'யானை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானை திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    also read :நடிகை ப்ரணித்தாவின் ‘கர்ப்பகால பயணம்’.. 

    கடந்த டிசம்பரில் யானை திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் விழா கடலூர் கிருஷ்ணாலையா  திரையரங்கில் திரையரங்கு உரிமையாளர் துரைராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இதில் புரொமோஷன் விழாவிற்கு நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி உட்பட படகுழுவினர் பலர் ரசிகர்கள் முன்னிலையில் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட ட்ரெய்லர் மற்றும் படத்தின் பாடல் காட்சியை  ரசிகர்கள் முன்னிலையில்  பார்வையிட்டனர்.

    ’மீண்டும் உங்களை சந்திப்பேன்; என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமெரிக்கா புறப்படும் முன் டி.ஆர். கண்ணீர் மல்க பேட்டி 

    பின்னர் செய்தியாளர்களை இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண்விஜய் சந்தித்தனர்

    அப்போது பேசிய இயக்குனர் ஹரி தமிழ்நாடு முழுவதும் யானை திரைப்படத்திற்கு மாவட்டம் மாவட்டமாக சென்று பிரமோஷன் செய்து வருகிறோம் என தெரிவித்தார். மேலும் நல்ல கதையை தேர்வு செய்து விட்டு சிங்கம் படத்தின் நான்காம் பாகம் எடுப்பதற்காக முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்
    விக்ரம் படம் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது இது தமிழ் சினிமாவுக்கான வெற்றி என தெரிவித்தார்.

    லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி – 2… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது 

    தொடர்ந்து  பேசிய நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி மாமா அவரது இயக்கத்தில் யானை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளேன். வெற்றி படமாக அமையும் என நம்புகிறேன் என்னால் முடிந்த அனைத்து உழைப்பையும் இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளேன் என தெரிவித்தார். மேலும் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தேன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறேன். நல்ல கதை அமைந்தால் மீண்டும் வில்லனாக நடிப்பேன் என கூறினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Arun Vijay

    அடுத்த செய்தி