செல்வராகவன் – கீர்த்தி சுரேஷின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள சாணிக் காயிதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது.
பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த அருண் மாதேஸ்வரன், முதல் படமாக ‘ராக்கி’யை இயக்கியிருந்தார். வசந்த் ரவி, பாரதி ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த அளவுக்கு வன்முறைக் காட்சிகள் தமிழ் சினிமாவில் இடம் பெற்றதில்லை என்று கூறும் அளவுக்கு ராக்கி படம் முழுவதும் ரத்த வெள்ளம் காணப்பட்டது. இதற்கெல்லாம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் எங்கிருந்து ரெஃபரென்ஸ் எடுக்கிறார் என்று ரசிகர்கள் வியந்து பாராட்டினர்.
இதையும் படிங்க - #Thalapathy66 அப்டேட்… படத்தில் இடம்பெறுவதை உறுதி செய்தார் நடிகர் ஷாம்
இவரது அடுத்த படமாக செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காயிதம் உருவான நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சாணி காயிதம் ட்ரெய்லர்
இந்தப் படத்திலும் வயலன்சுக்கு குறைவில்லை என்று கூறும் அளவுக்கு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க - கமலின் விக்ரம் பட ட்ரெய்லர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீடு
செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் இணைந்து எதிரிகளை போட்டுத் தள்ளும்படியாக ட்ரெய்லரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மே 6-ம்தேதி இந்தப் படம் அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது.
சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா சாணிக் காயிதம் படத்தை தயாரித்துள்ளது. ராக்கியைப் போலவை அருண் மாதேஸ்வரனுக்கு இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷின் டெரரான நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக சவாலான கேரக்டர்களை தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஏற்று நடிப்பது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.