முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உஷார் ! ரவி மரியா பெயரில் இன்ஸ்டாகிராமில் மோசடி - பரபரப்பு சம்பவம்

உஷார் ! ரவி மரியா பெயரில் இன்ஸ்டாகிராமில் மோசடி - பரபரப்பு சம்பவம்

ரவி மரியா

ரவி மரியா

இன்ஸ்டாகிராமில் தனது பெயரைப் பயன்படுத்தி சென்னையிலுள்ள நண்பரிடம் பணம் கேட்டதாகவும் தான் என நம்பி தனது நண்பர் உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ஜீவாவின் அறிமுகமப்படமான ஆசை ஆசையாய், மிளகா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரவி மரியா. வெயில், சண்டை, மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கொடூர வில்லனாக மிரட்டிய இவரை இயக்குநர் எழில் இவரை தனது மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா படங்களின் மூலம் காமெடி வில்லனாக மாற்றினார்.

ரவி மரியா நடிப்பில் கடந்த ஆண்டு இடியட், ஹாஸ்டல், காட்டேரி, ஓ மை கோஸ்ட் படங்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நடிகர் ரவி மரியா சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி தனது நண்பர்களிடம் பணம் கேட்டு சிலர் மோசடியில் ஈடுபடுதவாக தெரிவித்துள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் தனது பெயரைப் பயன்படுத்தி சென்னையிலுள்ள நண்பரிடம் பணம் கேட்டதாகவும் தான் என நம்பி தனது நண்பர் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். பிரபல நடிகரின் பெயரிலேயே மோசடி நடைபெற்றுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Instagram, Scam