Home /News /entertainment /

விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் படத்தின் ஷூட்டிங் நிறைவு…

விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் படத்தின் ஷூட்டிங் நிறைவு…

விஜய் ஆண்டனி - ரத்தம் பட போஸ்டர்

விஜய் ஆண்டனி - ரத்தம் பட போஸ்டர்

Ratham Movie : இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பாக கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போராஆகியோர் தயாரித்துள்ளார்கள்.

    விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் ரத்தம் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் கூறியுள்ளார்.

    தமிழ்படம் பாகம் 1 மற்றும் 2ம் பாகங்களின் வழியே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சி.எஸ். அமுதன். இவ்விரு படங்களும் அந்தந்த கால கட்டத்தில் வெளியான படங்களை புண்படாமல் கிண்டல் செய்வது போன்று உருவாக்கப்பட்டிருக்கும்.

    தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட படங்களை யாரும் எடுக்காத நிலையில் இவ்விரு படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.

    இந்நிலையில் விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து சி.எஸ்.அமுதன் கொஞ்சம் சீரியஸான படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு ரத்தம் என்று சமீபத்தில் டைட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வீட்டுக்கு வந்த ஜனனிக்கு சக்தி கொடுத்த பேரதிர்ச்சி..எதிர் நீச்சல் சீரியலில் முக்கிய திருப்பம்!

    தற்போது ரத்தம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக சி.எஸ். அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    அமுதன் தனது பதிவில், ‘ரத்தம் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று விட்டது. போர் வரப் போகிறது. அதை எதிர்கொள்ள எங்கள் வலிமையான தளபதி விஜய் ஆண்டனி இருக்கிறார். அதிர்ச்சியை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள்’ என்று அவருக்கே உரிய ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.

    ரத்தம் படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் , நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், மகேஷ் ஜெகன், மீஷா கோஷல் உள்ளிட்டோர்நடித்துள்ளனர்.

    கண்ணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை  கோபி அமர்நாத்தும்,எட்டிங்கை டி.எஸ். சுரேஷும், சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயனும் மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க - அடடா மழைடா அட மழைடா... தமிழில் வெளியான மழை பாடல்கள் ஒரு லிஸ்ட்!

    இந்த படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பாக கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போராஆகியோர் தயாரித்துள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Vijay Antony

    அடுத்த செய்தி