Home /News /entertainment /

மீண்டும் இணையும் ராட்சசன் ராம் குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி!

மீண்டும் இணையும் ராட்சசன் ராம் குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி!

ராம்குமார் - விஷ்ணு விஷால்

ராம்குமார் - விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் தற்போது செல்ல அய்யாவு இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் கட்டா குஸ்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

    நடிகர் விஷ்ணு விஷாலும், இயக்குநர் ராம்குமாரும் அடுத்ததாக இணையும் படம் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை எனத் தெரிகிறது. 

    விஷ்ணு விஷால் மற்றும் ராம் குமார் இருவரும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட ராட்சசன் திரைப்படத்தின் தொடர்ச்சிக்காக மீண்டும் இணைவதாக வெளியான செய்திக்கு இடையே, அவர்கள் ​​இருவரும் ராட்சசன் 2 படத்தை தொடங்குவதற்கு முன்பு மற்றொரு படத்தில் பணிபுரிவார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

    முன்னணி ஆங்கில ஊடகத்திற்கு இது குறித்து சில முக்கிய விஷயங்களைப் பகிர்துக் கொண்ட ஒருவர், ”விஷ்ணு விஷாலும் ராம் குமாரும் அடிக்கடி ஸ்கிரிப்ட்களைப் பற்றி விவாதிப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு விவாதத்தின் போதுதான் ஒரு கதையை டிக் செய்தார்கள். இது அவர்கள் இதுவரை இணைந்து பணியாற்றாத ஒருவகை கதைகளம். ராட்சசன் 2 படத்திற்குச் செல்வதற்கு முன்பு இந்தப் படத்தில் முதலில் பணியாற்றுவார்கள். தற்போது இது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அறிவிப்பு வருவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

    ரஜினிகாந்துடன் உதயநிதி ஸ்டாலினின் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம்!

    இதற்கிடையில், விஷ்ணு விஷால் தற்போது செல்ல அய்யாவு இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் கட்டா குஸ்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். 40 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கடைசி ஷெட்யூலுக்காக ஆகஸ்ட் மாதம் கேரளா செல்லவுள்ளது படக்குழு. மல்யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் அன்பறிவ் ஜோடி (விக்ரம் மற்றும் கேஜிஎஃப் 2 புகழ்) சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மறுபுறம் ராம்குமார், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குகிறார். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema, Vishnu vishal

    அடுத்த செய்தி