முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் இணையும் ராட்சசன் பட வெற்றிக்கூட்டணி… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

மீண்டும் இணையும் ராட்சசன் பட வெற்றிக்கூட்டணி… விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

ராட்சசன் படப்பிடிப்பின்போது இயக்குனர் ராம்குமார், ஹீரோ விஷ்ணு விஷால்

ராட்சசன் படப்பிடிப்பின்போது இயக்குனர் ராம்குமார், ஹீரோ விஷ்ணு விஷால்

Ratchasan Team : ராட்சசன் திரைப்படம் வெற்றி அடைந்ததால் மீண்டும் இணையும் இந்த கூட்டணியின் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இணைய உள்ளனர்.

2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான படம் ராட்சசன். சைக்கோ திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அத்துடன் தெலுங்கு மொழியிலும் ராட்சசன் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராம்குமார்,  தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த திரைப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் ராம்குமாரின் கதை எழுத அதிக நாட்கள் எடுத்துக் கொண்டதால் நடிகர் தனுஷ் வேறு வேறு படங்களில் நடிக்க தொடங்கினார்.

இதனால் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க ராம்குமார் முயற்சித்தார். ஆனால் அதுவும் சாத்தியமாகவில்லை. இந்த நிலையில் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளனர்.

இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தை விஷ்ணு விஷால் அல்லது சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.

ராட்சசன் திரைப்படம் வெற்றி அடைந்ததால் மீண்டும் இணையும் இந்த கூட்டணியின் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.  ராம்குமார் - விஷ்ணு விஷால் இணையும் இரண்டாவது படத்திற்கான அறிவிப்பு ஓடிரு வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

First published:

Tags: Actor Vishnu Vishal, Ratchasan