• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’ராட்சச ஆசிரியர்கள் எல்லா பள்ளிகளிலும் இருக்கிறார்கள்’ - ’ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார்!

’ராட்சச ஆசிரியர்கள் எல்லா பள்ளிகளிலும் இருக்கிறார்கள்’ - ’ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார்!

ராட்சசன் இன்பராஜ் - இயக்குநர் ராம்குமார்

ராட்சசன் இன்பராஜ் - இயக்குநர் ராம்குமார்

வகுப்பறையிலேயே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இன்பராஜ், எனும் கதாபாத்திரம் ராஜகோபாலன் ஒப்பிட்டு அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

  • Share this:
ராட்சச ஆசிரியர்கள் எல்லா பள்ளிகளிலும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார் ராட்சசன் திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார்.

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர், குழந்தைகள் பள்ளியில் தான் குழந்தைகள் பத்திரமாக இருப்பதாக நம்பிக்கையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் பள்ளிகளிலேயே சில சமயம் ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாலியல் நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்படுவது அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளில் பதிவாகிறது.

ஊரடங்கு காரணத்தால் தற்பொழுது பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் வீடியோ கால்கள் வழியே நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பெண் குழந்தைகளை வீடியோக்கள் அனுப்ப சொல்லியும், நள்ளிரவில் புகைப்படம் அனுப்ப சொல்லியும், ஆன்லைன் வகுப்புக்கிடையே சட்டை இன்றி வெறும் துண்டுடன் மாணவிகள் மத்தியில் தோன்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிகழ்வை விஷ்ணு விஷால் நடிப்பில், அண்மையில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பலரும் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். வகுப்பறையிலேயே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இன்பராஜ், எனும் கதாபாத்திரம் ராஜகோபாலன் ஒப்பிட்டு அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பேசியுள்ள திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார், இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கப்படவில்லை என்றும், பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு தான் இன்பராஜ் கதாபாத்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடைபெற்றுள்ள சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் இன்பராஜ் கதாபாத்திரத்தை விட கொடூரமானவர்கள் என்றும் தனது பதிவில் ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: