ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தெலுங்கில் தயாராகும் ராட்சசன் இரண்டாம் பாகம் - நாயகனாக விஜய் சேதுபதி?

தெலுங்கில் தயாராகும் ராட்சசன் இரண்டாம் பாகம் - நாயகனாக விஜய் சேதுபதி?

 விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். ஒரு டஜன் படங்களில் நடிக்கயிருக்கிறார். நடிப்பதற்கு இரண்டு டஜன் கதைகள் கேட்டிருக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் இந்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் ஒரு மைல் கல். இதன் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்கயிருக்கிறார். 2019-ல் இதன் தெலுங்கு ரீமேக் ராட்சசுடு வெளியானது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கயிருப்பதாக அறிவித்துள்ளனர்.

  ராட்சசன் படத்தை தெலுங்கில் ரமேஷ் வர்மா ரீமேக் செய்தார். பெல்லம்பொண்ட ஸ்ரீனிவாஸும், அனுபாமா பரமேஸ்வரனும் நடித்திருந்தனர். சத்யநாராயண கொனரு படத்தை தயாரித்திருந்தார். ராட்சசுடு அங்கு மிகப்பெரிய ஹிட். பொதுவாக எந்த மொழியில் முதல் பாகம் தயாரானதோ அந்த மொழியில்தான் இரண்டாம் பாகத்தை எடுப்பார்கள். பிற மொழிகளில் அதனை ரீமேக் அல்லது மொழிமாற்றம் செய்வார்கள். த்ரிஷ்யம் 2 அப்படித்தான் தயாராகி பிற மொழிகளுக்கு சென்றது. மாறாக ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கில் முதலில் எடுக்கிறார்கள். ராட்சசுடு 2 என்று அதற்கு பெயர் வைத்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், படத்தின் ஹீரோ யார் என்பது முடிவாகவில்லை.

  Ratchasan 2, ratchasan 2 Telugu, Vijay Sethupathi ratchasan 2, Ratchasan Director Ramkumar, ratchasan movie, ராட்சசன் இயக்குனர் ராம்குமார், ராட்சசன், ராட்சசன் திரைப்படம், ratchasan 2 in telugu, ratchasan 2 movie, ratchasan 2 vijay sethupathi, ராட்சசன் 2 தெலுங்கு, விஜய் சேதுபதி ராட்சாசன் 2

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  படத்தின் நாயகன் குறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ரமேஷ் வர்மா, ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க இருக்கிறோம் என்று மட்டும் பதிலளித்துள்ளார். இவர் சமீபத்தில் சென்னை வந்து விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொன்னார். அதனால், ராட்சசுடு 2-ல் அனேகமாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என ஹைதராபாத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

  விஜய் சேதுபதி அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். ஒரு டஜன் படங்களில் நடிக்கயிருக்கிறார். நடிப்பதற்கு இரண்டு டஜன் கதைகள் கேட்டிருக்கிறார். ஒரு நாளுக்கு 48 மணிநேரம் இருந்தாலும் விஜய் சேதுபதியால் நகர்த்த முடியாத ஷெட்யூல்ட் இது. இதில் தெலுங்கு ராட்சசுடு 2 இல் நடிப்பார் என நினைக்கிறீர்கள்?

  விஜய் சேதுபதியை நம்ப முடியாது, நடித்தாலும் நடிப்பார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi