நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு காரில் வைத்து விடாமல் முத்தம் கொடுத்திருக்கிறார் ஒருவர். உடனே யாரென்று யோசிக்க வேண்டாம், அது அவரது செல்லப்பிராணி தான்.
தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான முன்னணி நடிகைகளில் ஒருவரான ரஷ்மிகா மந்தன்னா தற்போது தனது இரண்டாவது இந்தி படமான 'குட்பை'யில், உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. அழகு, ஆற்றல்மிக்க நடிப்பிற்காக மட்டுமல்லாமல், பொது வெளியில் வெளிப்படும் டவுன் டூ எர்த் குணத்திற்காகவும் பலரது ‘க்ரஷ்ஷாக’ மாறியிருக்கிறார் ராஷ்மிகா.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில் லாக் டவுனில் தளர்வு அறிவிக்கப்பட்டதும், ரஷ்மிகா தனது
செல்லப்பிராணி ஆராவுடன் ஷாப்பிங் சென்றார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் அங்கு கூடினர். அனைவருக்கும் நன்றி தெரிவித்த ராஷ்மிகா, தொற்றுநோய் சமயத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதோடு அனைவரும் முகமூடி அணிந்திருப்பதை உறுதிசெய்துக் கொள்ள வேண்டும் என்றவாரு, இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது
ராஷ்மிகா வெள்ளை நிற டி-ஷர்ட், ஸ்கிம்பி டெனிம் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூக்களுடன் கறுப்பு மாஸ்க்கையும் அணிந்திருந்தார். இதற்கிடையே நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை பொறாமைப்படுத்தியது என்ன தெரியுமா? ஆரா, ராஷ்மிகாவை முகம் முழுவதும்
முத்தமிட முயற்சி செய்தது தான். ஆராவின் அன்பை முழுவதுமாக ராஷ்மிகா அனுபவித்ததாக தெரிகிறது. இந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.