ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அதே கண்ணாடி! மாறி மாறி க்ளிக்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவை டீகோட் செய்த ரசிகர்கள்

அதே கண்ணாடி! மாறி மாறி க்ளிக்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவை டீகோட் செய்த ரசிகர்கள்

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததுள்ளதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில், அந்த யூகத்திற்கு வலுசேர்க்கும் விதமாக விஜய்யும், ராஷ்மிகாவும் மாலத்தீவு சென்றிருக்கிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டா மாலத்தீவுக்கு சுற்றுலா டேட்டிங் சென்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், விஜய் தேவரகொண்டா அணியும் முக்கியமான பொருளை ராஷ்மிகாஅணிந்து போட்டோ எடுத்துள்ளார். இந்த போட்டோவை இருவரின் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

  தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் இருந்து வருகின்றனர்.

  இருவரும் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படங்களில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒர்க் அவுட் ஆனது. படத்தின் வெற்றிக்கும் இவ்விருவர் இடம்பெற்ற காட்சிகள் முக்கிய காரணமாக அமைந்தன.

  இறுதிக் கட்டத்தை நெருங்கும் 'வாரிசு' ஷூட்டிங்… தளபதி 67 அறிவிப்பு எப்போது தெரியுமா?

  இதற்கிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேவரகொண்டாவின் லைகர் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அவர் தற்போது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. லைகர் தோல்வியால் அதே படக்குழுவினருடன் அடுத்து எடுப்பதாக இருந்த ஜனகன மன படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

  ஸ்ரீகாந்தின் ஆக்ஷன் ஹீரோ கனவை தகர்த்த 3 படங்கள்

  இந்த சூழலில் 2 நாட்களுக்கு முன்பாக விஜய்யும், ராஷ்மிகாவும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது டேட்டிங் செய்து வருவதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில், அந்த யூகத்திற்கு வலுசேர்க்கும் விதமாக விஜய்யும், ராஷ்மிகாவும் மாலத்தீவு சென்றிருக்கிறார்கள்.

  இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் கூலர் கண்ணாடியை, ராஷ்மிகா மந்தனா அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

  இதை ராஷ்மிகா கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தெரியாது; ஆனால் இருவரையும் உற்று நோக்கும் தீவிர ரசிகர்கள், இந்த கண்ணாடி விஜய்க்கு சொந்தமானது என்பதை உறுதி செய்து, அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்கள்.

  ராஷ்மிகா மந்தனா தற்போது தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதேபோன்று நாடு முழுவதும் மெகா ஹிட்டான புஷ்பா படத்தின் அடுத்த பாகத்திலும் ராஷ்மிகா இடம்பெற்றுள்ளார். விஜய்தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 23-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actress Rashmika Mandanna, Vijay deverakonda