• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Rashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை

Rashmika Mandanna: ’தமிழ்நாட்டின் மருமகளாகணும்’ - ராஷ்மிகா மந்தனாவின் திருமண ஆசை

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமானவர் மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

  • Share this:
    கர்நாடகாவில் பிறந்து, தமிழை பிடிக்கும் என்று யார் சொன்னாலும் வாட்டாள் நாகராஜ் கோஷ்டிகள் வாளெடுப்பார்கள். அதையெல்லாம் மனதில் வைக்காமல், தமிழ் குடும்பத்தின் மருமகளாகணும் என்று தனது திருமண ஆசையை வெளிப்படுத்தியுள்ளார், சுல்தான் படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா.

    ராஷ்மிகா மந்தனா பிறந்தது கர்நாடகாவில் உள்ள கூர்க். 2016-ல் கன்னடப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 2018-ல் வெளியான தெலுங்குப் படம் கீதா கோவிந்தம் அவரை முன்னணி நடிகையாக்கியது. தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமானவர் மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    திருமணம் குறித்து கருத்து கூறியிருக்கும் ராஷ்மிகா, "தமிழ் கலாச்சாரமும், அதன் பாரம்பரியமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என்றாவது ஒருநாள் தமிழ் குடும்பத்தின் மருமகளாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை" என்று கூறியுள்ளார். அதாவது தமிழர் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்பது ராஷ்மிகாவின் விருப்பமாம்.

    ராஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்திலும், சர்வானந்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர இரு இந்திப் படங்களிலும் நடிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: