Shankar - Ram Charan: ஷங்கர், ராம் சரண் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?

Shankar - Ram Charan: ஷங்கர், ராம் சரண் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?

இயக்குநர் ஷங்கர்

பொதுவாக ஒரு படம் புரொடக்ஷனில் இருக்கையில் அடுத்தப் படம் குறித்து யோசிக்காதவர் ஷங்கர். முதல்முறையாக இந்தியன் 2 படப்பிடிப்பு முடியாத நிலையில், ராம் சரணுடன் ஒரு படமும், ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு படமும் என மொத்தம் மூன்று பட வேலைகளை ஒரே நேரத்தில் கவனிக்கிறார்.

  • Share this:
    பொதுவாக ஒரு படம் புரொடக்ஷனில் இருக்கையில் அடுத்தப் படம் குறித்து யோசிக்காதவர் ஷங்கர். முதல்முறையாக இந்தியன் 2 படப்பிடிப்பு முடியாத நிலையில், ராம் சரணுடன் ஒரு படமும், ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு படமும் என மொத்தம் மூன்று பட வேலைகளை ஒரே நேரத்தில் கவனிக்கிறார். ஷங்கரின் திரைப்பயணத்தில் இதுதான் முதல்முறை. இதற்குப் பிறகும் இப்படி நடக்குமா தெரியவில்லை. இதில் ரன்வீர் சிங் படம் அந்நியனின் இந்தி ரீமேக்.

    ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது. தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். இதில் முதல்வன் அர்ஜுன் போல் இளம் முதல்வராக ராம் சரண் நடிப்பதாகவும், நிருபர் ஒருவரை அவர் காதலிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் படமாக இது தயாராகிறது.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகாவுடன் பேசியுள்ளனர். இவரும் பூஜா ஹெக்டேவும்தான் இப்போது தெலுங்கு சினிமாவை ஆள்கின்றனர். இந்தப் படத்தில் ராம் சரணின் தந்தையும், தெலுங்கின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி முக்கிய வேடம் ஏற்கிறார்.

    இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் உள்பட பலரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இப்போது, இயக்குநர், தயாரிப்பாளர் ஒரே மனதாக தமன் பெயரை 'டிக்' அடித்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். ஹீரோவுக்கு அவர் அமைத்திருந்த பில்டப் பிஜிஎம் ஒட்டு மொத்த திரையுலகினரின் பாராட்டையும் பெற்றது. ரசிகர்கள் தமனை கொண்டாடினர். சில தினங்கள் முன்பு பாலகிருஷ்ணா நடித்திருக்கும் அகண்டா படத்தின் டீஸர் வெளியானது. அதிலும் தமனின் இசையே பெரிதும் பேசப்பட்டது.

    தெலுங்கின் சென்சேஷனல் இசையமைப்பாளராக இருப்பதால் ஷங்கர், ரம் சரண் படத்தில் தமனை ஒப்பந்தம் செய்திருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: